அமீரக செய்திகள்

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிக்கெட் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!! எப்போது வரை தெரியுமா??

ஐக்கிய அரபு அமீரகம் இன்று அதன் 52வது தேசிய தினத்தை கொண்டாடும் நிலையில், உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்து கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 2, 2023 முதல் மார்ச் 31, 2024 வரையிலான பயணங்களுக்கு டிசம்பர் 3 வரை நேரடி முன்பதிவுகளுக்கு 15 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டும் மொத்தம் 195 வாராந்திர புறப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய்க்கு (DXB) 80 விமானங்களும், ஷார்ஜாவிற்கு 77 வாராந்திர விமானங்களும், அபுதாபிக்கு 31 விமானங்களும் உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு இடங்களை இந்த விமான நிறுவனம் இந்தியாவுடன் இணைக்கிறது. அத்துடன் 2 விமானங்களுடன் அல் அய்ன் மற்றும் 5 வாராந்திர விமானங்களுடன் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களுக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை வழங்கி வருகின்றது.

இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் அலோக் சிங் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா பிராந்தியத்திற்கான திறனை அதிகரிக்கவும், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள வளைகுடா பயணிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்கவும் விமான நிறுவனம் முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சில விமான சேவைகளை வழங்க உள்ளதாகவும், இதனால் அமீரகம் மற்றும் வளைகுடா பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு நகரங்களுக்குள் சிறந்த இணைப்பைப் பெறுவார்கள் என்றும் சிங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் இந்திய வெளிநாட்டவர் வசித்து வருகின்றனர், இது அமீரகத்தில் வசிக்கும் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!