ADVERTISEMENT

துபாயின் மற்றுமொரு பகுதியில் கட்டண பார்க்கிங் அறிமுகம்..

Published: 4 Nov 2026, 6:56 PM |
Updated: 4 Nov 2026, 6:56 PM |
Posted By: Menaka

துபாயின் பல்வேறு பகுதிகளில் கட்டண பார்க்கிங் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது 599T என்ற பார்க்கிங் குறியீட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின்படி, துபாயின் ஜெபல் அலி தொழில்துறைக்கு வரும் வாகன ஓட்டிகள் இனி குறிப்பிட்ட பொது இடங்களில் வாகனத்தை நிறுத்தக் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் பார்க்கிங் வசதிகளை இயக்கும் பார்க்கின் (Parkin) நிறுவனம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது. மேலும், பார்க்கிங் விதிகள் மற்றும் பொருந்தக்கூடிய மணிநேரக் கட்டணங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

எனவே, குடியிருப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மணிநேர அடிப்படையில் பார்க்கிங் இடத்திற்கு கட்டணம் செலுத்தலாம். கட்டணங்கள் அந்தந்த இடங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் காட்டப்பட்டுள்ளன, மேலும் பார்க்கின் செயலி (Parkin app) மூலமாகவும் அவற்றைப் பெறலாம்.

ADVERTISEMENT

துபாய் ஜெபல் அலி பார்க்கிங் சந்தாக் கட்டணங்கள்

இந்தப் பகுதியில் பார்க்கிங் வசதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், ஒவ்வொரு வருகைக்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, சந்தாக்களைத் தேர்வு செய்யலாம்.

இதற்கான மண்டலம் 599T-இல் இலகுரக வாகனங்களுக்கான பின்வரும் சந்தாக் கட்டணங்களை பார்க்கின் அறிவித்துள்ளது:

ADVERTISEMENT
  • ஒரு மாதம்: 315 திர்ஹம்ஸ்
  • மூன்றாண்டு: 840 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதங்கள்: 1,680 திர்ஹம்ஸ்
  • ஓராண்டு: 2,940 திர்ஹம்ஸ்

இந்தச் சந்தாக்கள், செல்லுபடியாகும் காலத்தில் மண்டலம் 599T-க்குள் உள்ள காலி இடங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றன.

மேலும், வாகனம் நிறுத்துவதற்கு முன், பொருந்தக்கூடிய மணிநேரக் கட்டணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்புப் பலகைகளையோ அல்லது அதன் செயலியையோ சரிபார்க்குமாறு பார்க்கின் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel