அமீரக செய்திகள்

அமீரகத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை.. பிப்ரவரி மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2024ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி மாத எரிபொருள் விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் பிப்ரவரி மாத விலைப்பட்டியலின் படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.88 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜனவரி மாதத்தில் 2.82 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.76 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜனவரி மாதம் 2.71 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.69 திர்ஹம்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2.64 திர்ஹம்சாக ஜனவரி மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.00 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது பிப்ரவரி மாத விலை பட்டியலில் 2.99 திர்ஹம்சாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!