அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக பொது பார்க்கிங் சந்தா சேவையை அறிமுகப்படுத்திய எமிரேட்.. கட்டண விபரங்களும் வெளியீடு..!!

அமீரகத்தில் வாகன ஓட்டிகள் தினசரி வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் செலுத்தி வரும் நிலையில் திங்களன்று புதிதாக ஓரு மாதத்திற்கான பொது பார்க்கிங் சந்தா சேவையானது (subscription) ஷார்ஜா எமிரேட்டால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் ஒரு மாதத்திற்கான தனிப்பட்ட சந்தாவைப் பெற அனுமதிப்பதோடு அவர்கள் விரும்பும் இரண்டு மண்டலங்களையும் (zones)  இதில் இணைத்துக் கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒரு சந்தா செயல்படுத்தப்பட்டவுடன் தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சந்தா விவரக்குறிப்புகளின் அடிப்படையில் ஷார்ஜா நகருக்குள் பொது பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை சந்தாதாரருக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது. குடியிருப்பாளர்கள் தேர்வு செய்யும் சந்தா வகையைப் பொறுத்து சந்தா கட்டணங்கள் (subscription fees) மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங் சந்தாக்களின் வகைகள்:

ஷார்ஜா நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தனிப்பட்ட நபருக்கான பார்க்கிங் கட்டணங்கள்:

  • 10 நாட்கள்-170 திர்ஹம்ஸ்
  • 20 நாட்கள்- 290 திர்ஹம்ஸ்
  • 30 நாட்கள்- 390 திர்ஹம்ஸ்
  • 3 மாதங்கள் – 850 திர்ஹம்ஸ்
  • 6 மாதங்கள்-1,400 திர்ஹம்ஸ்
  • 12 மாதங்கள்-2,300 திர்ஹம்ஸ்

இரண்டு பகுதிகளுக்கு மட்டும் தனிப்பட்ட நபருக்கான பார்க்கிங் கட்டணங்கள்:

  • 1 மாதம் (புதியது) – 166 திர்ஹம்ஸ்
  • 3 மாதங்கள் – 500 திர்ஹம்ஸ்
  • 6 மாதங்கள் – 900 திர்ஹம்ஸ்
  • 12 மாதங்கள் – 1,700 திர்ஹம்ஸ்

ஷார்ஜா நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கமர்ஷியல் பார்க்கிங் கட்டணங்கள்:

  • 10 நாட்கள்-170 திர்ஹம்ஸ்
  • 20 நாட்கள்- 290 திர்ஹம்ஸ்
  • 30 நாட்கள்- 390 திர்ஹம்ஸ்
  • 3 மாதங்கள் – 1,050 திர்ஹம்ஸ்
  • 6 மாதங்கள் – 1,750 திர்ஹம்ஸ்
  • 12 மாதங்கள்- 2,850 திர்ஹம்ஸ்

இரண்டு பகுதிகளுக்கான கமர்ஷியல் பார்க்கிங் கட்டணங்கள்:

  • 3 மாதங்கள் – 600 திர்ஹம்ஸ்
  • 6 மாதங்கள் – 1,100 திர்ஹம்ஸ்
  • 12 மாதங்கள்- 2,100 திர்ஹம்ஸ்

குறிப்பிட்ட நபர்களுக்கான பார்க்கிங் கட்டணங்கள் (20% தள்ளுபடி):

  • 3 மாதங்கள் – 600 திர்ஹம்ஸ்
  • 6 மாதங்கள் – 1,050 திர்ஹம்ஸ்
  • 12 மாதங்கள்- 1,850 திர்ஹம்ஸ்

மேற்கூறப்பட்ட பார்க்கிங் சந்தா வகையானது, ஓய்வுபெற்ற, முதியோர் அல்லது கட்டண வாகன நிறுத்துமிடங்களில் வசிக்கும் அமீரக குடிமக்கள், ஷார்ஜா நகரத்தில் உள்ள அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக சேவை பயனாளிகள், தாயகப் பாதுகாப்பு அட்டை (homeland protectors card) அல்லது வேஃபர் கார்டு (waffer card) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்புடையது ஆகும்.

இதே போல் ஷார்ஜா அரசாங்கமானது கடந்த ஆண்டு, மாற்றுத் திறனாளி மக்களுக்கு இலவச பார்க்கிங் சந்தாக்களை அறிவித்திருந்தது. இந்த சேவை அவர்களுக்கான பார்க்கிங் செயல்முறையை எளிதாக்கியதுடன் பொது இடங்களில் மிகவும் அணுகக்கூடிய சூழலை மேம்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!