அமீரக செய்திகள்

அமீரகத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை.. மார்ச் மாத விலைப்பட்டியல் வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2024ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. இந்த மாதம் எரிபொருள் விலை முன்னர் இருந்ததை விட சற்று உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மார்ச் மாதத்திலும் எரிபொருள் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் குழுவின் மார்ச் மாத விலைப்பட்டியலின் படி, மார்ச் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.03 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை பிப்ரவரி மாதத்தில் 2.88 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 2.92 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை பிப்ரவரி மாதம் 2.76 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.85 திர்ஹம்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2.69 திர்ஹம்சாக பிப்ரவரி மாதத்தில் இருந்தது.

அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.99 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது மார்ச் மாத விலை பட்டியலில் 3.16 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!