அமீரக செய்திகள்

ஷார்ஜா ரமலான் நைட்ஸ் 2024: எக்கச்சக்கமான பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் அறிவிப்பு…

ரமலானை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அற்புதமான சலுகைகளும், ஷாப்பிங் டீல்களும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா, 21 நாட்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவங்களை வழங்கும் ‘ரமலான் நைட்ஸ் 2024’ இன் 41வது பதிப்பை நடத்த தயாராகி வருகிறது.

ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் (SCCI) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு எதிர்வரும் மார்ச் 21 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரமலான் நைட்ஸ் 2024, ரமலான் மாதத்தில் தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும், ஈத் அல் ஃபித்ரின் போது மாலை 3 மணி முதல் நள்ளிரவு வரையிலும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 200 க்கும் மேற்பட்ட முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 500 உள்ளூர் மற்றும் சர்வதேச பிராண்டுகள் வழங்கும் பல்வேறு வகையான தயாரிப்பு பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் இந்த அற்புதமான சலுகைகள் ஈத் அல் ஃபித்ர் வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16,000 மீட்டருக்கு மேல் பரவியுள்ள இந்த கண்காட்சி 150,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது முழு குடும்பத்திற்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளின் அற்புதமான வரிசையை காட்சிப்படுத்தும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பாரம்பரிய உடைகள், கைவினைப்பொருட்கள், பானங்கள் மற்றும் பிரபலமான ரமலான் உணவு வகைகளை காட்சிப்படுத்தும் ஹெரிட்டேஜ் வில்லேஜ், குழந்தைகளுக்கான பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் வேடிக்கையான விளையாட்டுகளை வழங்கும் குழந்தைகளின் கார்னரும் (children’s corner) உள்ளது.

இவை தவிர, கண்காட்சி முழுவதும் நடத்தப்படும் பல்வேறு ரேஃபிள் டிராக்கள் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் சிறப்பு ப்ரோமோஷன் மற்றும் மதிப்புமிக்க பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் 200 திர்ஹம்ஸ்க்கு ஷாப்பிங் செய்பவர்கள் டிராவுக்குத் தகுதிபெறுவார்கள் என்றும் இதில் பல்வேறு போட்டிகள் மூலம் கொள்முதல் வவுச்சர்கள் மற்றும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!