அமீரக செய்திகள்

அமீரகத்தில் நாளை துவங்கும் ரமலான்.. அறிவிப்பை வெளியிட்ட அரசு..!!

சவூதி அரேபியாவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை ஐக்கிய அரபு அமீரகத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே, இன்று, மார்ச் 10, ஷஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என்றும் மேலும் ரமலான் மாதம் நாளை (மார்ச் 11, திங்கள்) தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறை பார்க்கும் குழு கூடி ரமலான் மாதத்திற்கான பிறையை பார்த்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே சவூதியில் பிறை பார்க்கப்பட்டால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளும் சவூதியையே பின்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!