அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஜில்லென மாறிய வானிலை.. நாட்டிலேயே குறைந்தபட்ச வெப்பநிலை 2.4ºC ஐ இன்று பதிவு செய்த அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் வெப்பநிலை சற்று அதிகரித்திருந்த நிலையில், சில நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அமீரகம் முழுவதும் பகல் நேரங்களிலும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று மார்ச் 1 ம் தேதி அன்று ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸில் 2.4ºC வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்தாண்டின் குளிர்கால பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று ராஸ் அல் கைமா தவிர அமீரகத்தின் மற்ற சில பகுதிகளிலும் மிகக்குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தேசிய வானிலையி மையம் தெரிவித்துள்ளது. அதாவது புஜைராவில் உள்ள மெப்ரே மலையில் வெப்பநிலை 5.2ºC ஆகவும், ரஸ் அல் கைமாவில் உள்ள ஜபல் அல் ரஹ்பா பகுதியயில் வெப்பநிலை 5.5ºC ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த குளிர்காலத்தில், நாட்டில் நிலையற்ற வானிலை நிலவுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று மிகக்குறைந்த வெப்பநிலை நாட்டில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் சீரற்ற காலநிலை காரணமாக தமது வாகனங்களை பாதுகாக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, அல் அய்னில் கார்களும் மெத்தைகள், போர்வைகள் மற்றும் தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!