அமீரக செய்திகள்

அமீரகத்தில் வெப்பநிலை 14ºC வரை குறையும்…. ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் NCM தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சில சமயங்களில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் லேசானது முதல் மிதமான வேகத்தில் காற்று வீசும் என்றும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் தூசி மற்றும் மணலுடன் வீசக்கூடிய பலத்த காற்றால் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் அபாயம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அரேபிய வளைகுடாவில் கடல் சற்று சீற்றமாகவும், ஓமன் கடலில் சிறிது முதல் மிதமான சீற்றமாக இருக்கும் என்றும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இன்றைய தினம் நாட்டின் மலைப்பகுதிகளில் 14ºC வரை வெப்பநிலை குறையலாம் என்றும், உள் பகுதிகளில் 37ºC வரை அதிகபட்சமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!