அமீரக செய்திகள்

துபாயில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவை வழங்கும் உணவகங்கள்..!! பட்டியல் இங்கே…

அமீரகத்தில் இடைவிடாது பெய்த பலத்த மழை, ஏராளமான குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் உள்ள பல்வேறு உணவகங்களும் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.

ஆம், நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில கஃபேக்கள் மற்றும் உணவகங்கள், உணவு தேவைப்படுபவர்கள் இலவசமாக உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அதன்படி இலவசமாக உணவு வழங்கும் உணவகங்களின் பட்டியல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

1. சர்க்கிள் கஃபே (Circle Cafe)

மோசமான மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் இந்த கஃபே, தங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றில் இலவச உணவு மற்றும் தண்ணீரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கஃபே வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் சமூகத்திடமிருந்து நாங்கள் பெற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் எங்களால் முடிந்ததை எந்த வகையிலும் திருப்பித் தருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒன்றாக, இந்த புயலை எதிர்கொண்டு வலுவாக வெளிப்படுவோம், ஒரே குடும்பமாக ஒன்றுபடுங்கள்” என்று கூறியுள்ளது.

இடங்கள்:

துபாய்

  • பார்க் ஹவுஸ், 2டி ஸ்ட்ரீட் ஜுமேரா, கைட் பீச்
  • துபாய் ஸ்டுடியோ சிட்டி, கட்டிடம் எண். 2 (EIT கட்டிடம்)
  • DIFC கேட் 5, மார்பிள் வாக்
  • பில்டிங் 64 பிளாக் C, துபாய் ஹெல்த் கேர் சிட்டி
  • துபாய் மீடியா சிட்டி
  • பிசினஸ் பே, பே ஸ்கொயர் கட்டிடம் 7
  • ஷூரூக் கம்யூனிட்டி சென்டர், மிர்திஃப்
  • பார்க் ஹவுஸ், ஜுமேரா ஐலண்ட்ஸ்  பெவிலியன் ஜுமேரா ஐலண்ட்ஸ்
  • சாதியத் பீச் மற்றும் ரெசிடென்ஸ் (அபுதாபி)
  • மங்குரோவ் வில்லேஜ் (அபுதாபி)

2. ஹை ஜாய்ன்ட் (High Joint)

அமீரகத்தின் பிரபலமான பர்கர் கடையான ஹை ஜாய்ன்ட் அதன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “சமீபத்திய கனமழை மற்றும் வானிலை இடையூறுகள் எங்கள் அன்பான ஐக்கிய அரபு அமீரக சமூகத்தை பாதித்ததை அடுத்து, தேவைப்படும் நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க நாங்கள் ஒன்றாக வருகிறோம்” என்று தெரிவித்திருந்தது. இந்த உணவகம் அதன் பர்கர்கள் மற்றும் தண்ணீரை இலவசமாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறியுள்ளது.

இடங்கள்:

  • எமிரேட்ஸ் டவர்ஸ்
  • அல் மனாரா
  • அல் கவானீஜ்
  • மோட்டார் சிட்டி

3. தகாடோ (Taqado)

இந்த மெக்சிகன் உணவகம், ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமையன்று தேவைப்படுகிற அனைவருக்கும் இலவச சூடான உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் சமூகத்திலிருந்து நாங்கள் பெற்ற ஆதரவு மற்றும் அன்பிற்கு நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் எங்களால் முடிந்த வகையில் திருப்பித் தர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளது.

இடங்கள்:

  • DIFC
  • மீடியா சிட்டி
  • ஐ-ரைஸ்
  • துபாய் ஹில்ஸ்
  • பே ஸ்கொயர்
  • கைட் பீச்
  • துபாய் மால்

4. ஆபரேஷன் ஃபெலாஃபெல் (Operation Felafel)

இந்த உணவகமும் ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை அதன் அனைத்து கடைகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. உணவகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, உணவு தேவைப்படுபவர்கள், உணவகத்திற்கு சென்று சமூக ஆதரவு உணவுக்காக வந்திருப்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இடங்கள்:

  • பொலிவர்ட்
  • JBR
  • மீடியா சிட்டி
  • அல் முரூர் அபுதாபி
  • மோட்டார் சிட்டி
  • துபாய் ஹில்ஸ் மால்
  • அல் குசைஸ்
  • பெஸ்டிவல் சிட்டி

5. ஜரூப் (Zaroob)

பிரபலமான இந்த பாலஸ்தீனிய உணவகம் தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குவதன் மூலம் சமூகத்தினருடன் கைகோர்த்துள்ளது.  இங்கு உணவுகள் இருக்கும் வரை, ஒரு காம்ப்ளிமென்ட்ரி Zaatar Man’ouse மற்றும் தண்ணீரை அனுபவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இடங்கள்:

  • ஷேக் சையத் சாலை
  • மோட்டார் சிட்டி
  • மெரினா
  • அல் அய்ன்

6. ஃபைபர் மேகிஸ் (Fibber Maggee’s)

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாயில் உள்ள ஐரிஷ் பப் (Irish pub) இலவசமாக மதிய உணவை வழங்குகிறது. இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தீவிர வானிலையைத் தொடர்ந்து, இந்த வாரம் பலர் கஷ்டங்களை எதிர்கொள்வதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இது உங்களின் தேவையை சரிசெய்யப் போவதில்லை என்றாலும், இதன் மூலம் சில மணிநேரங்களுக்கு  உங்களுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.

இடம்:

  • ஷேக் சையத் சாலை

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!