துபாய்: E311 சாலையிலிருந்து அல் வர்கா செல்ல புதிய பாதை.. சாலை திட்டத்தை அறிவித்த RTA..!!
துபாயின் பிரதான சாலையான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (E311) இருந்து நேரடியாக அல் வர்கா பகுதிக்கான கூடுதல் நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளை அமைக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், இது சாலை திறனை ஒரு மணி நேரத்திற்கு 5,000 வாகனங்களாக அதிகரிக்கும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத்திட்டம் முடிக்கப்பட்டதும் பயண நேரம் 20 நிமிடங்களிலிருந்து வெறும் 3.5 நிமிடங்களாகக் குறையும், இது 80 சதவீதம் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் பயண தூரத்தை 5.7 கிமீ இலிருந்து 1.5 கிமீ வரை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
அல் வர்கா பகுதிக்கான இந்த புதிய நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள், சாலைகள், விளக்குகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், இது அதிகரித்து வரும் போக்குவரத்து அளவைக் கையாளும் என்றும், சுமார் 350,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அல் வர்கா 1 தெருவில் கூடுதல் மேம்பாடுகள் இருக்கும், இதில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பட்ட விவரக்குறிப்புகளுடன் தற்போதுள்ள ரவுண்டானாக்களை சமிக்ஞை செய்யப்பட்ட சந்திப்புகளாக மாற்றுவதும் அடங்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மேம்பாடுகள் அல் வர்கா 1 தெருவின் திறனை 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல் வர்காவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்
RTA தற்போது அல் வர்கா 3 மற்றும் அல் வர்கா 4 ஆகிய இடங்களில் உள்ளக சாலைகளை மேம்படுத்தித்து வருகிறது. குறிப்பாக, அண்டை பகுதிகளில் இருக்கும் பாதைகளுடன் இணைக்கும் வகையில் 16-கிலோமீட்டர் சைக்கிள் டிராக் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய கட்டத்தில், அல் வர்காவில் உள்ள உள் சாலை மேம்பாடுகள் நிறைவு செய்யப்பட்டது, இதில் அல் வர்கா 4 இல் உள்ள ஸ்கூல் ஆஃப் சயின்டிஃபிக் ரிசர்ச் சுற்றி மேம்பாடுகள் மற்றும் அதே பகுதியில் 136 வில்லாக்களை உள்ளடக்கிய முகமது பின் ரஷித் ஹவுசிங் எஸ்டாப்லிஷ்மென்ட் திட்டத்திற்கு சேவை செய்யும் சாலைப்பணிகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், பாதசாரி பாதைகள், நடைபாதைகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பார்க்கிங் நுழைவாயில்கள், விளக்குகள் ஆகியவையும் இந்த மேம்பாட்டுப் பணிகளில் அடங்கும். கூடுதலாக, 7.4-கிலோமீட்டர் சைக்கிள் டிராக்கையும் ஆணையம் நிறைவு செய்தது.
உள் சாலைகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அல் குசைஸ் தொழில்துறை பகுதிகள் 1, 2, 3, 4 மற்றும் 5 இல் உள்ளக சாலைகள் மற்றும் விளக்கு திட்டங்கள் RTAஆல் நிறைவு செய்யப்பட்டது. 10 கிலோமீட்டருக்கு 32 சாலைகள் மற்றும் 43,000 மீட்டருக்கு மேல் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டம் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 500 வாகனங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 1,500 வாகனங்களாக போக்குவரத்து அளவை அதிகரித்து, சாலைத் திறனை 200 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இது அல் குசைஸ் தொழில்துறை பகுதிகள் மற்றும் பின்வரும் நான்கு முக்கிய சாலைகள் இடையே இணைப்பை மேம்படுத்தியுள்ளது: அம்மான் ஸ்ட்ரீட், பெய்ரூட் ஸ்ட்ரீட், அலெப்போ ஸ்ட்ரீட் மற்றும் டமாஸ்கஸ் ஸ்ட்ரீட்.
இந்த முன்முயற்சி 320 க்கும் மேற்பட்ட ஒர்க் ஷாப்கள், 25 குடியிருப்பு கட்டிடங்கள், சில்லறை கடைகள் மற்றும் கல்வி மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்தியதன் மூலம், சுமார் 60,000 மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிக்கு பயனளிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel