UAE: தீபாவளியை முன்னிட்டு 5 நாட்கள் வரை விடுமுறையை அறிவித்த பள்ளிகள்.. மாணவர்கள் மகிழ்ச்சி..!!

இந்தியாவின் மிகப்பெரும் பண்டிகையான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல இந்திய பள்ளி மாணவர்கள் ஐந்து நாட்கள் வார விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏறத்தாழ 3,860,000 இந்திய வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38% க்கும் அதிகமாக வசிக்கும் இந்திய சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும்.
எனவே, நாட்டில் உள்ள இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சில பள்ளிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் இணைந்து நான்கு நாள் விடுமுறையை அனுபவிப்பார்கள்.
இன்னும் சில பள்ளிகளில் புதன்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக சிலருக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். அத்துடன் இந்த ஆண்டு விழாக்கள் அக்டோபர் 29 அன்று தண்டேராஸுடன் (Dhanteras) தொடங்குகின்றன, அதே நேரத்தில் முக்கிய தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 31 வியாழன் அன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து துபாயில் உள்ள அமிட்டி பள்ளியின் முதல்வர் சங்கீதா சிமா பேசிய போது, “இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பாக உள்ளது, ஏனெனில் நாங்கள் மிகவும் வெற்றிகரமாக முதல் பருவத்தை முடித்த பிறகு பண்டிகைக் கொண்டாட்டங்கள் வருகின்றன. மேலும், இந்தாண்டு 5 நாட்கள் தீபாவளி விடுமுறை உள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு முன், பள்ளி மாணவர்கள் தீபாவளியின் உணர்வைக் குறிக்கும் கலை மற்றும் கைவினைப் படைப்புகளில் ஈடுபடுவார்கள் என்றும், அதில் காகிதத் தட்டுகளால் அழகான விளக்கை வடிவமைத்தல், ரங்கோலி கோலமிடுதல் போன்றவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, துபாயில் விடுமுறை நாட்கள் பள்ளி சமூகத்திற்குத் தெரிவிக்கும் முன் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தால் (KHDA) முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, சர்வதேச பாடத்திட்டத்திற்கு 182 நாட்கள் ஆகும். எனவே, தேவையான குறைந்தபட்ச பள்ளி நாட்களை பூர்த்தி செய்யும் வரை, பள்ளிகள் அவற்றின் காலெண்டர்களுடன் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன என்பதை முன்னிலைப்படுத்துவது முக்கியம்.
அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்க பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டதாகவும், அது அதிர்ஷ்டவசமாக கல்வி ஒழுங்குமுறை அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel