UAE: தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்த கட்டுப்பாடு.. வரம்பை நிர்ணயித்த அபுதாபி!!
அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கூட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு அதிகமாக உயர்த்த முடியாது என அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு கட்டண உயர்வைக் கோருவதற்கு முன் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (ADEK) சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக் கட்டணம் அபுதாபியின் கல்விச் செலவுக் குறியீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விச் செலவுக் குறியீட்டின் (Education Cost Index) அடிப்படையில், கல்விக் கட்டண உயர்வுக்கான வரம்பை 15 சதவீதமாக ADEK அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வைக் கோருவதற்கு முன் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்
ADEK கல்வி கட்டணத்திற்கான வரம்பை நிர்ணயித்தாலும் வரம்பை தாண்டி கட்டண அதிகரிப்புக்கு பள்ளிகள் ஒப்புதல் பெற குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி இழப்புகளை நிரூபிக்க வேண்டும் மற்றும் இந்த காலத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, அவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்றும் செல்லுபடியாகும் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 80 சதவீத மாணவர்கள் பதிவு விகிதத்தை பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், பள்ளிகள் ஒரு கல்வியாண்டில் ஒரு முறை மட்டுமே அதிகபட்ச கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், கட்டண உயர்வுக்கான எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிப்பதற்கான அதன் உரிமையையும் துறை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் கல்விக்கட்டணம் கல்வி ஆண்டு முழுவதும் குறைந்தது மூன்று தவணைகள் முதல் 10 தவணைகள் வரை வசூலிக்கப்பட வேண்டும் என்பதையும் துறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeபதிவு கட்டணம்
அபுதாபியில் கல்வியாண்டு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பள்ளிகள் கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை வசூலிக்கலாம் என்று புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் (tuition fee) 5 சதவீதம் வரை பதிவுக் கட்டணமாக வசூலிக்க பள்ளிகளுக்கு இந்தக் கொள்கை அங்கீகாரம் அளிக்கிறது. கல்வியாண்டு தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வரையில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து பள்ளிகள் இந்தக் கட்டணத்தை வசூலிக்கலாம், மேலும் அது மாணவர்களின் இறுதிக் கல்விக் கட்டணத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும்.
நிதி உத்தரவாதங்கள் இல்லை
கூடுதலாக, கல்விக் கட்டணங்களுக்கு மாற்றாக பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து எந்தவொரு நிதி உத்தரவாதத்தையும் கோருவது அல்லது ஏற்றுக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு முன் பள்ளிகள் ப்ரீ-டெபாசிட், ஆரம்ப விண்ணப்பம் அல்லது முதல் முறை பதிவுக் கட்டணத்தை பெற்றோரிடம் கோரக்கூடாது.
அதே பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக் கட்டணத் தள்ளுபடிகள், தெளிவாக வரையறுக்கப்பட்ட தொகைகள், நேரம், பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கைகள் மற்றும் பிற விதிமுறைகளை அவர்களின் ஒப்பந்தங்களில் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அனைத்து கட்டணங்களையும் வகைப்படுத்துதல்
புதிய கொள்கையின்படி, பள்ளிகள் கல்விக் கட்டணத்தை கல்விக் கட்டணம், கல்வி ஆதாரக் கட்டணம் (educational resource fees), சீருடை கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், கூடுதல் பாடத்திட்டச் செயல்பாடு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் என ஆறு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், பதிவு செய்யும் போது பள்ளிகள் இந்த விபரங்களை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்தக் கொள்கை, வாரியத் தேர்வுகளுக்கு (board exams) நிர்வாகக் கட்டணத்தை வசூலிக்கவும் பள்ளிகளை அனுமதிக்கிறது, அவை தெளிவாக நியாயப்படுத்தப்பட்டு பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தால். இந்தக் கட்டணங்கள் ஆவணச் செயலாக்கம், மேற்பார்வை மற்றும் அஞ்சல் போன்ற செலவுகளை ஈடுகட்ட வேண்டும்.
சாதாரண கட்டண உயர்வு
மேற்கூறியவை தவிர, சாதாரண சூழ்நிலையில், பள்ளிகள் ECI உடன் இணைந்து Irtiqaa எனப்படும் பள்ளி ஆய்வுகளின் மதிப்பீட்டின் படி மட்டுமே கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கப்படுகிறது. கடந்த விதிமுறையின்படி, ‘outstanding’ என்று மதிப்பீட்டைப் பெற்ற பள்ளிகள் தங்கள் கல்விக் கட்டணத்தை அதிகபட்சமாக 3.94 சதவீதத்துடன் அதிகரிக்க தகுதி இருந்தது; அதேபோல், ‘very good’ பள்ளிகள் 3.38 சதவீத கல்விக் கட்டணம் கூடுதலாகத் தகுதி பெற்றன; ‘good’ என மதிப்பிடப்பட்ட பள்ளிகள் 2.81 சதவீத சிடெண்ட் உயர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டன, மேலும் ‘acceptable’, ‘weak’ மற்றும் ‘very weak’ என மதிப்பிடப்பட்ட பள்ளிகள் அதிகபட்ச கல்விக் கட்டண உயர்வை ECI மதிப்பெண்ணுக்கு ஏற்ப 2.25 சதவீதம் மட்டுமே செயல்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel