டிசம்பர் 1 முதல் புத்தம் புதிய லைட் செட்டிங்கில் ஒளிர விருக்கும் புர்ஜ் கலீஃபா..!!
துபாயின் ஐகானிக் அடையாளங்களில் ஒன்றான புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில், அமீரகத்தின் தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது இந்த புதிய விளக்குகள் துபாயின் வானத்தில் பிரகாசிக்கத் தயாராக உள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் சுமார் 829.8 மீட்டர் உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் கட்டடக்கலை கலைத்திறனுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, டைனமிக் RGBW விளக்கு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது என்று Emaar Properties தெரிவித்துள்ளது. மேலும் அமீரகத்தின் ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டங்களின் போது, டிசம்பர் 1 ஆம் தேதி இந்த புதிய அமைப்பு அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைப்பை நிறுவும் செயல்முறையானது, தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக ஆறு மாத மாக்-அப் சோதனையுடன் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் டைனமிக் RGBW தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதாகவும், நிலையான விளக்குகளுக்குப் பதிலாக வண்ணத்தை மாற்றும், சிக்கலான லைட்டிங் எஃபெக்ட்களை உருவாக்குவதற்கு சாதனங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடமாக உயர்ந்து நிற்கும் புர்ஜ் கலீஃபா அதன் 15வது ஆண்டு விழாவை ஜனவரி 4, 2025 அன்று கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel