UAE: தேசிய தின விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்!!

ஐக்கிய அரபு அமீரகம் அதன் 53வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் வேளையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் இந்தாண்டின் கடைசி நீண்ட வார விடுமுறைக்கு உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தேசிய தின விடுமுறைக்காக இரண்டு நாட்கள் இலவச பார்க்கிங் இடங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக RTA வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 2 திங்கள் மற்றும் டிசம்பர் 3 செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து பொது பார்க்கிங்கிலும் வாகன ஓட்டிகள் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் (மல்டி ஸ்டோரீ பார்க்கிங் தவிர) என்று தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், இது மூன்று நாள் இலவச பார்க்கிங் காலமாக மாறியுள்ளது.
இந்தாண்டு முதல் ஈத் அல் எதிஹாத் என்று அழைக்கப்படும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் நாட்டில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து துபாயில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள், நர்சரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளன, டிசம்பர் 4 புதன்கிழமை முதல் சாதாரண வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel