3 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசு.. 20 கிலோ தங்கம்.. டிசம்பர் 6 முதல் தொடங்கும் DSF திருவிழா..!!
ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் திரும்பும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் இந்தாண்டு பதிப்பில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ரொக்கப் பரிசாக 3 மில்லியன் திர்ஹம்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ‘Dream Dubai’ இணையத்தில் ஷாப்பிங் செய்வதன் மூலம், ஆன்லைன் டிராவில் நுழைந்து பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DSF இன் தினசரி நிகழ்வுகளின் முழு அட்டவனையை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், துபாய் கோல்டு அண்ட் ஜூவல்லரி குழுமம் வழங்கும் ரேஃபிள் டிராவின் ஒரு பகுதியாக ஷாப்பிங் செய்பவர்கள் 1.5 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசு மற்றும் 20 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக, தங்கம் வெல்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், DSF மெகா ரேஃபிள் தினசரி ஒரு வெற்றியாளருக்கு 10,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசு, புத்தம் புதிய சொகுசு கார்களை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இது தவிர, ஒரு மில்லியன் ஸ்கைவர்ட் பாயிண்ட்களும் (skyward points) DSFஇன் பிற பரிசுகளில் அடங்கும்.
அமீரகக் குடியிருப்பாளர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த DSF வருகின்ற டிசம்பர் 6 முதல் ஜனவரி 12 வரை 38 நாட்களுக்கு நடைபெறும். இந்த மாபெரும் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் போது 50க்கும் மேற்பட்ட கச்சேரிகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும், மேலும் இது ஃபெஸ்டிவலின் சிறந்த பதிப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeகுறிப்பாக, ஒரு நாளைக்கு இரண்டு முறை 1000 ட்ரோன்களைக் கொண்ட பிரத்யேக ட்ரோன் ஷோவும், தினசரி வானவேடிக்கைகளும் இடம்பெறும் என்பதுடன், இந்த சீசன் முழுவதும் ஹத்தாவில் வார விடுமுறை நாட்களில் வாணவேடிக்கைகளும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ‘Uncommon X’ திருவிழா குடியிருப்பாளர்களுக்கு ஒரு பாலைவன அனுபவத்தைத் தரும் என்றும், DSF ஆட்டோ சீசனின் ஒரு பகுதியாக சூப்பர் கார் அணிவகுப்பு மற்றும் 24 மணிநேர பந்தயங்களை அனுபவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel