அமீரக தேசிய தினம்: கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் ஃபுஜைரா எமிரேட்…
ஐக்கிய அரபு அமீரகம் வருகின்ற டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அதன் 53 வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், இந்தாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு ஈத் அல் எதிஹாத் என்ற அதிகாரப்பூர்வ பெயரை ஏற்பாட்டுக் குழு அறிவித்தது. இந்நிலையில், இந்த ஈத் அல் எதிஹாத் பண்டிகைக்காக பல நாட்கள் கொண்டாட்டங்களை ஃபுஜைரா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஃபுஜைரா ஏற்பாட்டுக் குழு (Fujairah Organising Committee) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, திப்பா அல் ஃபுஜைரா, அல் தவ்யீன், அல் கர்யா, மசாஃபி, அல் சீஜி, வும், முர்பா, அவ்ஹாலா மற்றும் பிற பகுதிகள் உட்பட எமிரேட்டின் பல இடங்களில் தேசிய தின நிகழ்வுகள் நடைபெறும் என்றும், இது நாட்டின் நேசத்துக்குரிய விடுமுறையில் பரவலான பங்கேற்பை உறுதி செய்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் பரந்த சமூக ஈடுபாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நாட்டின் கூட்டு மகிழ்ச்சியை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்ட ஏற்பாட்டுக் குழு, பரவலான மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, ஃபுஜைரா மற்றும் திப்பா அல் ஃபுஜைரா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பல்வேறு செயல்பாடுகள் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஃபுஜைரா அரசாங்க எமிரி நீதிமன்றத்தின் இயக்குனர் முகமது சயீத் அல் தன்ஹானி, தேசிய தின கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்க எமிரேட்டின் தயார்நிலையை வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும், இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஃபுஜைராவின் ஆட்சியாளருமான ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel