மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு துபாய் வழங்கும் ‘10 வருட கோல்டன் விசா’..!! நிபந்தனைகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் கோல்டன் விசா என்பது நீண்ட கால, புதுப்பிக்கத்தக்க குடியிருப்பு விசா ஆகும், இது விண்ணப்ப வகையைப் பொறுத்து 5 அல்லது 10 ஆண்டுகள் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அல்லது பட்டதாரிகள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
திறமைசாலிகளை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளை சேரந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் இந்த கோல்டன் விசாவை பெற தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தற்போதைய விசா வழங்கப்பட்ட அதே எமிரேட்டில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யாரெல்லாம் தகுதியானவர்?
1. அமீரக பல்கலைக்கழகங்களின் சிறந்த பட்டதாரிகள்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்க போர்ட்டலின் படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால், அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்த சிறந்த மாணவர்களுக்கு 10 வருட காலத்திற்கு கோல்டன் விசா வழங்கப்படலாம்:
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe- படித்து முடித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகவில்லை
- பல்கலைக்கழகம் கல்வி அமைச்சினால் A அல்லது B வகுப்பில் தரப்படுத்தப்பட வேண்டும்
- பல்கலைக்கழகத்தின் பரிந்துரைக் கடிதம் அல்லது அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது அங்கீகாரம் பெற்ற கல்விப் பதிவேடு, மாணவர்களின் ஒட்டுமொத்த GPA (CGPA) A வகுப்பு பல்கலைக்கழகங்களில் 3.5 க்கு குறையாமலும் B வகுப்பு பல்கலைக்கழகங்களில் 3.8 க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
2. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் சிறந்த பட்டதாரிகள்:
UAEயின் அரசாங்க போர்ட்டலின் படி, பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 10 வருட காலத்திற்கு கோல்டன் விசா வழங்கப்படலாம்:
- பட்டப்படிப்பு சான்றிதழ் கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது
- படித்து முடித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகவில்லை
- கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு முறையின்படி, உலக அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இந்த பல்கலைக்கழகம் தரப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- மாணவரின் ஒட்டுமொத்த GPA 3.5 க்கும் குறைவாக இருக்கக் கூடாது.
3. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்:
அமீரகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 5 வருட கோல்டன் விசாவிற்கு பெற தகுதியுடையவர்கள் ஆவர். எனினும் அவர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- மாணவர் தேசிய அளவில் முதலிடம் பெற்றவர் (அரசு அல்லது தனியார் மேல்நிலைப் பள்ளியில் குறைந்தபட்ச மதிப்பெண் 95 சதவீதம் இருக்க வேண்டும்)
- கல்வி அமைச்சின் (எமிரேட்ஸ் பள்ளிகள் ஸ்தாபனம்) பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- கோல்டன் விசா 5 வருட காலத்திற்கானது, ஆனால் 5 வருடங்களுக்கும் மேலாக படிக்கும் காலம் தேவைப்படும் நாட்டில் உள்ள மேஜர்கள் அல்லது கல்லூரிகளில் ஒன்றில் மாணவர் சேர்ந்திருந்தால் நீட்டிக்கப்படலாம்.
நீங்கள் படித்த பல்கலைக்கழகம் A அல்லது B என மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறிவது?
பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டைத் தெரிந்துகொள்ள, விண்ணப்பதாரர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகலாம் அல்லது அவர்களின் நிர்வாகத் துறையைத் தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
துபாயில் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க, icp.com ஐப் பார்வையிடவும்
- முகப்புப் பக்கம் சென்று இடது பக்க மெனுவில் “Golden Visa” என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த படியாக, “high school students/college students” என்பதன் கீழ் “start service” என்பதைக் கிளிக் செய்யவும்
- பின்னர், “Visa – Golden Residence – Nomination Request for Golden Residence – New Request” என்பதற்குச் சென்று, “Start Service” என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- உங்களின் நியமனக் கோரிக்கைக்கான ICP அனுமதியைப் பெற்றவுடன், ஒப்புதல் மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள அமர் சேவை மையத்திற்குச் செல்லவும். மாற்றாக, நீங்கள் GDRFA இணையதளம், ஸ்மார்ட் பயன்பாடு அல்லது வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கியமாக, கோல்டன் விசாவை வைத்திருக்கும் மாணவர்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தங்கள் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விசாவை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel