துபாயின் 3 மால்களில் புதிய பார்க்கிங் சிஸ்டம்.. கட்டணம் உயர வாய்ப்புள்ளதா..??
துபாய் முழுவதும் பல மால்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நிர்வகித்து வரும் மஜித் அல் ஃபுத்தைம் நிறுவனம், பார்க்கின் (Parkin) நிறுவனத்துடன் இணைந்து, துபாய் எமிரேட்டில் உள்ள மூன்று பிரபலமான மால்களிலும் தடை இல்லாத பார்க்கிங் (barrierless) சிஸ்டம் என்ற புதிய பார்க்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
துபாயின் முதன்மை பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்கின் (Parkin) நிறுவனம், துபாயில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (MoE), சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்டிஃப் ஆகிய மால்களில் ஜனவரி 1, 2025 முதல் வாகனங்களுக்கான இந்த புதிய கட்டண பார்க்கிங் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் இந்த மால்களில் இனி பார்க்கிங் கட்டணம் உயரக்கூடும் என பலர் எதிர்பார்க்கும் நிலையில் மால் ஆஃப் எமிரேட்ஸ், சிட்டி சென்டர் தேரா மற்றும் சிட்டி சென்டர் மிர்டிஃப் ஆகிய மால்களில் வாகன ஓட்டிகளுக்கான பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று மஜித் அல் ஃபுத்தைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட இந்த குழுமம், ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மால்கள் வழியாகச் செல்லும் 20 மில்லியனுக்கும் அதிகமான கார்களுக்கு தடையற்ற பார்க்கிங் வசதியைச் செயல்படுத்த, பார்க்கின் (Parkin) நிறுவனத்துடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 2025ல் அமலுக்கு வரவுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது குறித்து மஜித் அல் ஃபுத்தைம் அசெட் மேனேஜ்மன்ட்டின் CEO கலீஃபா பின் பிரைக் பேசுகையில், “மால் ஆஃப் எமிரேட்ஸில் முதல் நான்கு மணி நேரமும், சிட்டி சென்டர் தேராவில் முதல் மூன்று மணிநேரமும் பார்க்கிங் இலவசம், அதைத் தாண்டி எங்கள் கடைகளில் ஒன்றில் பரிவர்த்தனை செய்தால், உங்கள் டிக்கெட்டைச் சரிபார்த்து, கட்டணத்தை விலக்கிக் கொள்ளவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சிட்டி சென்டர் மிர்டிஃப்பில் பார்க்கிங் இலவசம் என்பதையும் தெளிவுபடுத்திய அவர், இந்த மாலில் உள்ள சில விஐபி இடங்கள் தற்போது பார்க்கிங் தடைகளைக் (barrier) கொண்டுள்ளதாகவும், பார்கின் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பார்க்கிங் அமைப்பைப் பெற்றவுடன் அவை அகற்றப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், மால்களில் பார்க்கிங்கை சிறப்பாக நிர்வகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதலலே பார்க்கின் உடனான ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்பதை எடுத்துரைத்த அவர் கட்டணங்கள் அப்படியே இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
சாலை மேம்படுத்தல்கள்
மஜித் அல் ஃபுத்தைம் அசெட் மேனேஜ்மென்ட் ஐந்து நாடுகளில் இயங்கும் 29 மால்களின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. அவற்றில் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் அதன் முதன்மைத் திட்டமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், Majid Al Futtaim மற்றும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து, மால் ஆஃப் தி எமிரேட்ஸைச் சுற்றியுள்ள முக்கிய சாலை நெட்வொர்க் மேம்படுத்தல்களில் பணியாற்றின.
தற்பொழுது, அபுதாபியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மாலுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணியிலும் அவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மால் ஆஃப் தி எமிரேட்ஸுக்கு செலும் வாகன ஓட்டத்தில் ஏறக்குறைய 15-லிருந்து 20-சதவீதம் அதிகரிப்பை எதிர்பார்ப்பதால் சாலை மேம்படுத்தல் போக்குவரத்து நெரிசலை பெரிதும் எளிதாக்கும் என்றும், வார நாட்களில் சராசரியாக 30,000 கார்கள் மாலில் பார்க்கிங் வசதிகளுடன் தொடர்பு கொள்வதுடன், வார இறுதியில் இந்த எண்ணிக்கை 36,000 ஆக உயர்வதாகவும் என்று பின் பிரைக் கூறியுள்ளார்.
ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம்
பார்க்கின் நிறுவனத்தின் தடையற்ற பார்க்கிங் தொழில்நுட்பத்துடன், பார்வையாளர்களின் கார் பார்க்கிங்கிற்குள் நுழையும் போது அல்லது வெளியேறும் போது தடைகளில் (barriers) காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு நிறுவப்பட்டுள்ள மேம்பட்ட கேமராக்கள் தானாகவே உரிமத் தகடுகளைப் படம்பிடித்து, ஒவ்வொரு வாகனத்தின் முன்னேற்றம் மற்றும் தங்கியிருக்கும் கால அளவைக் கண்காணிக்கும்.
புதிய பார்க்கிங் அமைப்பைச் செயல்படுத்துவதால், நெரிசல் அளவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வரிசையில் நிற்கும் நேரங்கள், குறிப்பாக பீக் ஹவர்ஸ், சீரான போக்குவரத்து ஓட்டம் மற்றும் மேம்பட்ட பார்க்கிங் அனுபவத்தை உறுதி செய்யும் என்று பின் பிரைக் விவரித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பரபரப்பான காலங்களில், ஒரு பயணத்திற்கு 20 வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நேரத்தை மிச்சப்படுத்தலாம், இது இறுதியில் பார்வையாளர்கள் பார்க்கிங்கிற்காக செலவிடும் நேரத்தை குறைக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel