அமீரக செய்திகள்

UAE Jobs: 2025ல் பெரும்பாலான துறைகளில் உள்ள ஊழியர்களின் சம்பளம் உயரும்… ஆய்வில் தகவல்..!!

வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் சம்பளம் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பில் வெளியான தரவுகளின் படி, நாட்டில் உள்ள கால் பகுதிக்கும் (28.2 சதவீதம்) அதிகமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது, இது திறமையான ஊழியர்களுக்கான அதிகரித்த தேவையைக் குறிக்கிறது.

‘Mercer’ எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த வருடாந்திர மொத்த சம்பளக் கணக்கெடுப்பில் (Total Remuneration Survey), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எரிசக்தி (energy), நிதிச் சேவைகள் (financial services sectors), பொறியியல், கட்டுமானம், ரியல் எஸ்டேட், உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை, சேவைகள், உயிர் அறிவியல் (life sciences) மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த ஆய்வின் படி, நுகர்வோர் பொருட்கள் துறையில் உள்ள நிறுவனங்களில் சம்பள உயர்வு 4.5 சதவீதமாக இருக்கும் என்றும், உயிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொழில்கள் முறையே 4.2 சதவீதம் மற்றும் 4.1 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கணிக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எரிசக்தி மற்றும் நிதிச் சேவைத் துறைகள் 4 சதவீத சம்பள அதிகரிப்புடன் சந்தையுடன் இணைந்துள்ளன.

மேலும், அனைத்துத் தொழில்துறைகளிலும் உள்ள முதலாளிகள், ஊழியர்கள் எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பள உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

இது குறித்து Mercerஇன் UAE Career Products தலைவர் ஆண்ட்ரூ எல் ஜெயின் தெரிவிக்கையில் “இவ்வாறு  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள  பெரும்பான்மையான முதலாளிகள் வருகின்ற 2025 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதைக் காண்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. சம்பளத்தை அதிகரிப்பதுடன், HR வல்லுநர்கள் அவர்களின் வீட்டுக் கொடுப்பனவுகளையும் (housing allowance) மதிப்பாய்வு செய்ய வேண்டும், நாட்டில் வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதால், போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, ஜெனரேட்டிவ் AI, ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன் ஆகியவை திறமையாளர்களின் தேவையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் Mercer கணக்கெடுப்பு ஆராய்ந்தது. தற்போது மத்திய கிழக்கிலேயே அமீரகம்தான் அதிக AI பயன்பாட்டு விகிதங்களைக் கொண்டுள்ளது, அதாவது 74 சதவீத மக்கள் வாரத்திற்கு ஒருமுறை AI ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் Mercer’s Global Talent Trends படி, UAE யில் உள்ள CEO கள் எதிர்கால வளர்ச்சிக்கு AI சிறந்த உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து Mercerஇன் Middle East Career Products தலைவர் டெட் ராஃபூல் பேசிய போது, “ஜெனரேட்டிவ் AI மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை வேலைச் சந்தையை விரைவாக மாற்றுகின்றன, எங்கள் பணியாளர்களுக்குத் தேவையான திறன்களை மாற்றுவதுடன் சம்பளத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வணிகத் தலைவர்கள் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மாற்றத்திற்குத் திறந்திருக்கும் கலாச்சாரங்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், எனவே அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்கள் எதிர்கால பணிக்கு தயாராக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

ஆகவே, புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு, மேம்பாட்டிற்கான இடைவெளிகள் மற்றும் பகுதிகளைக் குறிக்க, முதலாளிகள் தங்கள் தற்போதைய திறன் இருப்புகளை மதிப்பிடுமாறு மெர்சர் பரிந்துரைக்கிறது. அவர்கள் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, பணியமர்த்தல் மற்றும் தக்கவைப்பு இயக்கம் பற்றிய சிறந்த புரிதலைப் பெற வேண்டும். இந்த புதிய யதார்த்தத்தில் வேறுபட்ட ஊழியர் மதிப்பு முன்மொழிவை (Employee Value Proposition EVP) உருவாக்குவதும் முக்கியமானதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!