15 நிமிடங்களில் லைசென்ஸ்.. 48 மணிநேரத்தில் விசா.. அமீரகத்தின் புதிய ஃப்ரீ ஸோன் பற்றி தெரியுமா..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் மெயின் லாண்ட் (main land) மற்றும் ஃப்ரீ ஸோன் (free zone) என இரு பிரிவில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அமீரகத்தில் தற்பொழுது வரை பல ஃப்ரீ ஸோன்கள் இருக்கும் நிலையில் அஜ்மானில் புதிதாக ஒரு ஃப்ரீ ஸோன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அஜ்மானில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Ajman NuVentures Center Free Zone (ANCFZ) என்ற இந்த இலவச மண்டலம் 2 மாதங்களுக்குள் 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஈர்த்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 47 இலிருந்து 48 இலவச மண்டலங்கள் இருந்தாலும், இந்த புதிய ஃப்ரீ ஸோன் அவற்றிலிருந்து வேறுபடுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அஜ்மான் நியூவென்ச்சர்ஸ் சென்டர் ஃப்ரீ சோனின் CEO ரிஷி சோமையா கூறுகையில் “உதாரணமாக, நாட்டில் பல விமான நிறுவனங்கள் உள்ளன, ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக உள்ளது. அதன் சேவை, தரம், சரியான நேரத்தில் விமானங்கள் மற்றும் நல்ல வசதிகளே அதற்குக் காரணம் என்று விளக்கியுள்ளார். அதபோல், குறைந்த வரிவிதிப்பு, தாராளமய விதிமுறைகள், பாதுகாப்பு, வாழ்க்கை முறை மற்றும் கோல்டன் விசா ஆகியவற்றின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகமானது FDI மற்றும் நிறுவனங்களை ஈர்ப்பதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “15,000 திர்ஹம்ஸ் முதல் 20,000 திர்ஹம்ஸ் வரை, உலகில் எந்த நாட்டில் நீங்கள் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி குடியிருப்பு அனுமதியைப் பெறலாம்? எங்கும் இல்லை. எனவே மக்கள் அமீரகத்திற்கு வருகிறார்கள், அவர்கள் தொடர்ந்து வருவார்கள். அமீரகம் மிகவும் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது. Emirates, Etihad மற்றும் flydubai போன்றவற்றின் உறுதியான இணைப்பு காரணமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு செல்வதை எளிதாகக் காண்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், அமீரகத்தில் உள்ள ஃப்ரீ ஸோன்கள் எண்ணெய் அல்லாத பொருளாதாரத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன, உலகெங்கிலும் உள்ள உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கின்றன மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் அதிவேகமாக வளர உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeபிற இலவச மண்டலங்களைப் போலல்லாமல், அஜ்மானின் மையத்தில் அமைந்துள்ள ANCFZ – அமைப்பு முற்றிலும் டிஜிட்டல் ஆகும். எனவே, விண்ணப்பங்களை ஃபிரிண்ட் செய்வது போன்ற செயல்களை முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் கையெழுத்திடலாம். ANCFZஇல் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து டைப்பிங் செய்து, எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள் என்றும், வாடிக்கையாளர்களின் சார்பாக அனைத்து வேலைகளையும் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நிமிடங்களில் லைசென்ஸ், 48 மணி நேரத்தில் விசா
தொடர்ந்து பேசிய சோமையா, “ஒரு நிறுவனத்தைத் திறக்க பொதுவாக மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். விசா பெற இன்னும் 15 முதல் 20 நாட்கள் ஆகும். ஆனால் எங்கள் வாடிக்கையாளருக்கு இரண்டு மணி நேரத்தில் உரிமம் வழங்குகிறோம், 48 மணி நேரத்திற்குள் விசா வழங்குகிறோம், மற்றவர்களுக்கு இந்த செயல்முறைக்கு 14 முதல் 15 நாட்கள் ஆகும். இது எங்கள் வாக்குறுதி. அனைத்து உரிமங்களும் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டன” என்று கூறியுள்ளார்.
செயல்பாடுகளின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் இந்த புதிய ஃப்ரீ ஸோன் உரிமங்களை வழங்குகிறது என கூறப்படுகின்றது. குறிப்பாக, கேமிங், பிளாக்செயின் மற்றும் AI போன்ற செயல்பாடுகளைச் சேர்த்துள்ளதாகவும், கேமிங் ஒரு பெரிய தொழில், எனவே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற கேமிங் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு இந்த உரிமங்களை வழங்குகிறோம் என்றும் சோமையா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அலுவலகம், இணை வேலை மற்றும் பகிரப்பட்ட அலுவலக இடங்களையும் ANCFZ வழங்குகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
செலவு
ஒரு ஷேர்ஹோல்டர் விசா மற்றும் ஒரு செயல்பாட்டிற்கான உரிமத்திற்கு 12,000 திர்ஹம்ஸ் வசூலிக்கும் இலவச மண்டலங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட சோமையா, 12,000 திர்ஹம்ஸ்க்கு, நாங்கள் 10 செயல்பாடுகளையும் நீங்கள் விரும்பும் பல ஷேர்ஹோல்டர்களை சேர்க்கவும் நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், “நீங்கள் முன்பணம் செலுத்தினால், 10 சதவீதம் தள்ளுபடி உண்டு, அதன் விலை 10,800 திர்ஹம் மட்டுமே. பின்னர் எங்களிடம் ஒரு தவணை திட்டம் உள்ளது. 10,800 திர்ஹம்ஸ்க்கு, நீங்கள் 10 செயல்பாடுகள் கொண்ட நிறுவன உரிமத்தையும், 48 மணி நேரத்திற்குள் 2 வருடங்களுக்கு விசாவையும் பெறுவீர்கள். அந்த விலையை யாராலும் முறியடிக்க முடியாது, மேலும் இது வேகமானது” என்று உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகளைத் திறப்பதில் ஸ்டார்ட்-அப்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இலவச மண்டலம் ஒரு சில உள்ளூர் வங்கிகளுடன் கையெழுத்திட்டதால், ANCFZ உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் தங்கள் வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் ஃப்ரீ ஸோனில் நிறுவனங்களை அமைக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel