நவம்பர் 24ம் தேதி துபாயில் இந்த சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்!! மாற்று வழிகளை அறிவித்த RTA…
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பங்கேற்பாளர்களால் ஷேக் சையத் சாலை உள்ளிட்ட துபாயின் சில முக்கிய சாலைகள் ஆக்கிரமிக்கப்படும் என்பதால் சாலையை தற்காலிகமாக மூடுவதாக RTA அறிவித்துள்ளது.
இந்த சாலை மூடல்கள் நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் காலை 10.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும், இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய மாற்று வழிகளை பின்பற்றுமாறும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
துபாய் ரன்னின் போது மூடப்படும் சாலைகள்:
- டிரேட் சென்டர் ரவுண்டானாவிற்கும் இரண்டாவது பாலத்திற்கும் இடையே ஷேக் சையத் சாலை
- ஷேக் சையத் சாலைக்கும் அல் போர்சா ஸ்ட்ரீட்டுக்கும் இடையே அல் சுகூக் ஸ்ட்ரீட்
- ஷேக் சையத் சாலை மற்றும் அல் கைல் சாலை இடையே ஃபினான்ஷியல் சென்டர் சாலை (கீழ் நிலை)
- ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டில் இருந்து ஒரு வழி பாதை
RTA வழங்கிய மாற்று வழிகள்:
- ஃபினான்ஷியல் சென்டர் சாலை (மேல் நிலை)
- ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட்
- அல் முஸ்தக்பால் சாலை
- அல் வாசல் சாலை
- அல் கைல் சாலை
- அல் படா ஸ்ட்ரீட்
RTA வெளியிட்ட அறிவிப்பின் படி, ஞாயிற்றுக்கிழமை குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும், சாத்தியமான தாமதங்களைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீ்கத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe