UAE தேசிய தின விடுமுறை: 2 நாட்கள் இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின விடுமுறைக்காக அனைவரும் மும்முரமாக எதிர்பார்த்து விடுமுறையை கழிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி தயாராகி வரும் நிலையில் ஷார்ஜா எமிரேட்டில் வாகன ஓட்டிகளுக்கு தேசிய தின விடுமுறையை முன்னிட்டு இரண்டு நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எமிரேட்டில் உள்ள பொது பார்க்கிங் பயனர்கள் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கட்டணமின்றி பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தலாம். அதன் பின்னர், வரும் டிசம்பர் 4, புதன்கிழமையன்று பார்க்கிங் இடங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஷார்ஜாவின் கட்டண பார்க்கிங் இடங்களில் வழக்கம் போல் கட்டணங்கள் வசூலிக்கப்படும், அவை பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் ஒவ்வொரு நாளும் கட்டணத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பார்க்கிங் மண்டலங்களை நீல தகவல் அறிகுறிகளால் அடையாளம் காணலாம்.
முன்னதாக, துபாயில் வரவிருக்கும் பொது விடுமுறை நாட்களில் இலவசமாக பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel