அமீரக செய்திகள்

அமீரகத்தில் களைகட்டும் 11.11 சேல்.. 90% தள்ளுபடி, ஃப்ரீ கிஃப்ட வவுச்சர் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் இப்போது தங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை சிறப்பு தள்ளுபடியிலும், சலுகையிலும் வாங்கிக் குவிக்கத் தயாராகலாம். ஆம், அமீரகக் குடியிருப்பாலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 11.11 விற்பனை விரைவில் தொடங்கவிருக்கிறது. எனவே, ஷாப்பிங் ஆர்வலர்கள் ஷாப்பிங் வேட்டையை ஆரம்பிக்க இதுவே பொருத்தமான நேரமாக இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆன்லைன் மற்றும் ப்ரிக் அண்ட் மோர்ட்டார் சில்லறை விற்பனையாளர்கள் 11.11 மற்றும் Yellow Friday’ விற்பனையின் போது 90 சதவீதம் வரை தள்ளுபடிகள், நூற்றுக்கணக்கான திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் இலவச இணைப்புகளை வழங்குகிறார்கள்.

நூன் மற்றும் அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் ஜாம்பவான்கள் மற்றும் கேரிஃபோர் (Carrefour), லுலு ஹைப்பர் மார்க்கெட் (lulu), ஜம்போ (jumbo), ஐகியா (ikea), தனூப் ஹோம் (danube home), சென்டர்பாயின்ட் (centerpoint) போன்ற பிற சில்லறை விற்பனை அங்காடிகள் 11.11 விற்பனையைத் தொடங்கியுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

மேலும், சில சில்லறை விற்பனை நிறுவனங்கள் உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதற்கிடையில், Tabby மற்றும் Tamara போன்ற Buy-now-pay-late (BNPL) தளங்கள், ஷாப்பிங் செய்பவர்களுக்கு கட்டணங்களை பிரித்து கட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆன்லைன் ஷாப்பிங் தளமான நூன், ” Yellow Friday” விற்பனையின் கீழ், “அதிக தேவையுள்ள தயாரிப்புகளுக்கு தள்ளுபடி விலைகள் மற்றும் பிரத்தியேகமான டீல்கள்” என்று உறுதியளித்துள்ளது. ஃபேஷன் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை அனைத்து வகைகளிலும் தள்ளுபடிகள், ஃபிளாஷ் டீல்கள், மூட்டைகள் மற்றும் சிறப்பு விளம்பரங்களை வழங்கும் இந்த விற்பனை நவம்பர் 23 முதல் 30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ADCB கிரெடிட் கார்டுகளைக் கொண்ட ‘நூன் ஒன் (Noon One)’ வாடிக்கையாளர்கள் 30 சதவீத தள்ளுபடியையும், எமிரேட்ஸ் NBD நூன் ஒன் விசா கார்டுதாரர்கள் நூன் பிளாட்பார்ம்களில் 20 சதவீதம் வரை தள்ளுபடியையும் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இ-காமர்ஸ் ஜாம்பவானான அமேசானும் இணைந்துள்ளது. ஆம், அமேசான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 8 முதல் 12 வரை தினசரி அத்தியாவசியப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், அழகு மற்றும் ஃபேஷன் தயாரிப்புகள் 11.11 விற்பனையை நடத்துகிறது. இது உடனடி தள்ளுபடிக்காக Mastercard, First Abu Dhabi Bank மற்றும் Dubai First ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. குறிப்பாக, அதன் பிரைம் உறுப்பினர்கள் இலவச உள்ளூர் மற்றும் சர்வதேச டெலிவரியை பெறலாம்.

குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் மீது 50 சதவிகிதம் வரையிலும், கேமிங் சாதனங்கள் மற்றும் பாகங்கள் மீது 35 சதவிகிதம் வரையிலும், வீட்டு உபயோகப் பொருட்களில் 46 சதவிகிதம் வரையிலும், சமையலறை உபகரணங்களில் 50 சதவிகிதம் வரையிலும், 50 சதவிகிதம் வரை மற்றும் அழகு மற்றும் தனிப்பட்ட கவனிப்பில் 50 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று இ-காமர்ஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பிரபல மரச்சாமான்கள் விற்பனையாளரான Ikea இன் 11.11 விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது, இது நவம்பர் 17 வரை நீடிக்கும். ஆன்லைனில் மட்டும் நடைபெறும் இந்த விற்பனை நிகழ்வானது, தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கையறை அத்தியாவசியப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிற வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இதேபோல், UAE-ஐ தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர் ஜம்போ, 11.11 விற்பனையின் ஒரு பகுதியாக, நவம்பர் 12 வரை தினசரி பரிசுகள் மற்றும் உத்தரவாதமான பரிசுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 1,000 திர்ஹம்ஸ் மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 250 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ஹாட் ஏர் பலூன் மற்றும் விடுமுறை நாட்களுக்கான கூடுதல் பயண வவுச்சர்கள் உட்பட 500 திர்ஹம்ஸ் பொழுதுபோக்கு மற்றும் பயண வவுச்சர்கள் கிடைக்கும்.

இதேபோல், ‘Danube Home’ தளபாடங்கள், சமையலறை மற்றும் அலங்கார உபகரணங்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும், வெளிப்புற பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும், மற்ற பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்குகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஹைப்பர் மார்க்கெட் பிளேயர்களான கேரிஃபோர் மற்றும் லுலு ஹைப்பர் மார்க்கெட் ஆகியவை 11.11 விற்பனையின் ஒரு பகுதியாக பல்வேறு மளிகைப் பொருட்களில் பெரிய தள்ளுபடியை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!