அஜ்மானில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் நோக்கில், கட்டண பார்க்கிங் முறை விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, வரும் சனிக்கிழமை, நவம்பர் 7, 2026 முதல், மேலும் மூன்று பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மாற்றத்தை அஜ்மான் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சேவைகளைச் சிறப்பானதாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது அமல்படுத்தப்படுவதாக நகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டண பார்க்கிங் விதிமுறைகள் அல் சலாம் ஸ்ட்ரீட் (Al Salam Street), அல் ஹெஜென் ஸ்ட்ரீட் (Al Hejen Street) மற்றும் ஷேக் சையத் ஸ்ட்ரீட் (Sheikh Zayed Street) ஆகிய இடங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன ஓட்டிகளுக்கு இந்த மாற்றங்கள் குறித்துத் தெரிவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்களைக் காட்டும் வரைபடங்களுடன் கூடிய மூன்று தனித்தனி அறிவிப்புகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
புதிய வாகன நிறுத்துமிட விதிமுறைகள் அமலுக்கு வரும் இடங்கள் இதோ:



இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel