ஆண்டு இறுதியை முன்னிட்டு பிக் டிக்கெட் அதிரடி.. 30 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு அறிவிப்பு..!!
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தாண்டு முடிவடையவுள்ள நிலையில், அபுதாபியில் நடத்தப்பட்டு வரும் பிக் டிக்கெட் டிசம்பர் மாதத்தில் 30 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவலில் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் கிராண்ட் பரிசை வெல்வதுடன், இம்மாதம் நான்கு வாராந்திர இ-டிராக்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீசனில் ‘Big Win Contest’ மீண்டும் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிக் டிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டிசம்பர் 1 முதல் 25 வரை, ஒரே பரிவர்த்தனையில் 1,000 திர்ஹம்களுக்கு இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் பங்கேற்பாளர்கள் தானாகவே வாராந்திர டிராவில் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது.
நான்கு வாரங்களில், ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் ஜனவரி 3 நேரடி டிராவின் போது பிக் வின் போட்டிக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இறுதிப் போட்டியாளர்கள் 20,000 திர்ஹம்ஸ் முதல் 150,000 திர்ஹம்ஸ் வரையிலான பரிசுகளை வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களின் பெயர்கள் பிக் டிக்கெட் இணையதளத்தில் ஜனவரி 1, 2025 அன்று வெளியிடப்படும் என்றும், இறுதி வெற்றியாளர்கள் நேரடியாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தவிர, கார் ரசிகர்களுக்கு, பிக் டிக்கெட் அதன் ‘ட்ரீம் கார்’ பரிசுகளைத் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் நேரலை டிராவின் போது ஒரு மசெராட்டி கிரேகேல் (Maserati Grecale) பரிசளிக்கப்படும் என்றும் பரிசுகளில் ஒரு BMW M440iயும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காருக்கான குலுக்கல் பிப்ரவரி 3ம் தேதி 150 திர்ஹம்ஸ் டிக்கெட்டுகளுடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக் டிக்கெட்டில் பங்கேற்க விரும்புபவர்கள், டிக்கெட்டை ஆன்லைனில் பிக் டிக்கெட் இணையதளம் மூலமாகவோ அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் கவுண்டர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel