துபாய் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க போறீங்களா..?? டவுன்டவுன் துபாய் அணுகலுக்கான முழு விபரங்களையும் இங்க தெரிஞ்சுக்கலாம்…

புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கண்கவர் பட்டாசுகளுடன் இரவு வானத்தை அலங்கரிக்க உள்ளது. வானுயர் கட்டிடத்தின் மீது காட்சிப்படுத்தப்படும் இந்த இடைவிடாத வானவேடிக்கைகள் மற்றும் லேசர் ஷோக்களை டவுன்டவுன் துபாயில் இருந்தும் ரசிக்க முடியும். அவ்வாறு டவுன்டவுன் துபாயில் இருந்து புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விபரங்கள் இங்கே உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டவுன்டவுன் துபாய்க்கான அணுகல் குறிப்பிட்ட மண்டலங்கள் (zones) மற்றும் வாயில்களாக (gates) கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் நீங்கள் ஒரு பொது பார்வை பகுதிக்கு செல்கிறீர்களா அல்லது டிக்கெட்டுகள் அல்லது முன்பதிவுகளுடன் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்கு செல்கிறீர்களா என்பதைப் பொறுத்ததாகும்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக, சமீபத்தில் அணுகல் வாயில்கள், மண்டலங்கள், போக்குவரத்து விருப்பங்கள், பார்க்கிங் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் பகுதிகளை உள்ளடக்கிய விரிவான திட்டம் ‘Emaar Dubai’ ஆல் வெளியிடப்பட்டது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்:
டவுன்டவுன் துபாய்: NYE மண்டலங்கள்
பார்வையாளர்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக டவுன்டவுன் துபாய் ஐந்து வண்ண-குறியிடப்பட்ட மண்டலங்களாக (light blue, lime, teal, pink, purple) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் கொடிகள் மற்றும் அடையாளங்களுடன் தெளிவாகக் குறிக்கப்படும், மேலும் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட எமார் பிரதிநிதிகள் தளத்தில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுன்டவுன் துபாய்க்கான அணுகல் வாயில்கள்
டவுன்டவுன் துபாய்க்கு செல்லும் ஏழு அணுகல் வாயில்கள் உள்ளன, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன:
1. கேட் 1: பவுல்வர்டு ஹைட்ஸ் பின்னால் (Behind Boulevard Heights)
- அணுகல்: Teal Zone, Pink Zone
- அருகிலுள்ள மெட்ரோ நிலையம்: பிசினஸ் பே
2. கேட் 2: புர்ஜ் விஸ்டாவின் பின்னால் (Behind Burj Vista)
- அணுகல்: Pink Zone, Purple Zone
- அருகிலுள்ள மெட்ரோ நிலையம்: பிசினஸ் பே
3. கேட் 3: எமார் ஸ்கொயருக்கு அருகில் (Near Emaar Square)
- அணுகல்: Pink Zone, Purple Zone
- அருகிலுள்ள மெட்ரோ நிலையம்: புர்ஜ் கலீஃபா/துபாய் மால்
4. கேட் 4: பவுல்வர்டு பிளாசா அருகில் (Near Boulevard Plaza)
- அணுகல்: Pink Zone, Purple Zone
- அருகிலுள்ள மெட்ரோ நிலையம்: ஃபினான்ஷியல் சென்டர்
5. கேட் 5: ஃபவுன்டைன் வியூஸிற்கு அருகில்
அணுகல்: Lime Zone, Light Blue Zone
6. கேட் 6: அட்ரெஸ் டவுன்டவுன்க்கு முன்னால் (In front of Address Downtown)
துபாய் மால் வழியாக நுழையும் முன்பதிவு கொண்ட விருந்தினர்களுக்கு பிரத்தியேகமான வழியாகும்.
7. கேட் 7: வெளிர் நீல மண்டலம் (Light Blue Zone)
முன்பதிவு இல்லாத குடும்பங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.
இவற்றில் ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வார்டுக்குள் அனைத்து வாயில்கள் வழியாகவும் குடும்பங்கள் மற்றும் தம்பதிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுகலுக்கான பேட்ஜ் (access badges):
டவுன்டவுன் துபாயில் முன்பதிவு செய்யப்பட்ட மண்டலங்களுக்கான கட்டண முன்பதிவுகள் அல்லது தங்குமிடங்களைக் கொண்ட விருந்தினர்கள் அணுகல் பேட்ஜ்களைப் பெறுவார்கள். பேட்ஜின் நிறம் நியமிக்கப்பட்ட மண்டலத்திற்கு ஏற்றவாறு இருக்கும்.
யாருக்கு பேட்ஜ் தேவை?
- துபாய் மால், சூக் அல் பஹார், டைம் அவுட் மார்க்கெட் மற்றும் டவுன்டவுன் உணவகங்கள் அல்லது ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் விருந்தினர்கள்
- டவுன்டவுன் துபாய் குடியிருப்பாளர்கள் (Emaar One ஆப் மூலம்).
- புர்ஜ் பார்க் டிக்கெட் வைத்திருப்பவர்கள்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உங்கள் பேட்ஜை எப்போதும் பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட மண்டலங்களுக்கு செல்ல செல்லுபடியாகும் பேட்ஜ் இருந்தால் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும்.
புர்ஜ் பார்க்கில் உள்ள பார்க்கும் பகுதி (view point)
பார்வையாளர்களின் பிரீமியம் அனுபவத்திற்காக, பிங்க் மண்டலத்தில் உள்ள புர்ஜ் பார்க் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் உணவு மற்றும் பான விருப்பங்களை வழங்குகிறது. Boulevard Heightsக்கு எதிரே அமைந்துள்ள கேட் 1 வழியாக இந்த மண்டலத்தை அணுகலாம்.
பொதுமக்கள் பார்க்கும் பகுதிகள்
குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்காக பிரிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட பொதுக் காட்சிப் பகுதிகளில் வானவேடிக்கைகளை இலவசமாக பார்க்கலாம்:
குடும்பங்களுக்கு:
- ஓல்ட் டவுன், டவுன்டவுன் துபாய் (Old Town, Downtown Dubai)
- சவுத் ரிட்ஜ் (South Ridge)
- அவுட்டர் பவுல்வர்டு (Outer Boulevard)
- ஆக்ட் ஒன் ஆக்ட் டூ டவர்ஸ் (Act One and Act Two Towers)
- கேஸ்கேட் கார்டன் (Cascade Garden)
இளைஞர்களுக்கு:
- ரோவ் ஹோட்டல் (Rove Hotel)
- ஜபீல் மால் (Za’abeel Mall)
- விடா ரெசிடென்சஸ் (Vida Residences)
- புர்ஜ் விஸ்டா (Burj Vista)
- புர்ஜ் வியூஸ் (Burj Views)
பார்வையாளர்களுக்கான போக்குவரத்து திட்டம் மற்றும் பார்க்கிங் இடங்கள்
பொதுப் போக்குவரத்திற்குப் பதிலாக சொந்த வாகனத்தை ஓட்ட திட்டமிடும் பார்வையாளர்கள், டவுன்டவுன் துபாய்க்கு வருவதற்கு சாலை மூடப்படுவதற்கு முன்னதாகவே புறப்படுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நீங்கள் துபாய் மால், ஜபீல், ஃபவுண்டன் வியூஸ் அல்லது பவுல்வர்டு அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதிகளில் கிடைக்கும் 16,000 பார்க்கிங் இடங்களில் ஒன்றில் வாகனத்தை நிறுத்தலாம்.
எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டவுன்டவுன் துபாய்க்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் மாலை 4 மணிக்கு மூடப்படும். எனவே, அதற்கேற்றவாறு, முன்கூட்டியே வீட்டிலிருந்து புறப்படுமாறு பார்வையாளர்கள அறிவுறுத்தப்படுகிரார்கள்.
பேட்ஜ் வைத்திருப்பவர்களுக்கான ஷட்டில் பேருந்துகள்
சாலை மூடப்பட்ட பிறகு, பேட்ஜ் வைத்திருப்பவர்கள் அல் வாஸ்லில் உள்ள அல் வாஸ்ல் கிளப் அல்லது மேதானில் உள்ள பால்கன் ஹெரிடேஜ் மற்றும் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நிறுத்தலாம். இந்த பார்க்கிங் இடங்களுக்கு இலவச ஷட்டில் பேருந்துகள் பேட்ஜ் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்லும். ஷட்டில் பேருந்துகளைப் பயன்படுத்த உங்கள் அணுகல் பேட்ஜை நீங்கள் வழங்க வேண்டும். ஷட்டில்களுக்கான டிராப்-ஆஃப் பகுதிகற் பின்வருமாறு:
- கிராண்ட் பார்க்கிங்
- அட்ரெஸ் டவுன்டவுன்
- பேலஸ் டவுன்டவுன்
- பவுல்வர்ட் சென்ட்ரல்
- துபாய் ஓபரா
துபாய் மாலுக்கு சாலிக் பார்க்கிங்
புத்தாண்டு தினத்தன்று துபாய் மாலில் பார்க்கிங் செய்வதற்கு சாலிக் கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், ஜபீல் மற்றும் ஃபவுண்டன் வியூசில் பார்க்கிங் இலவசம்.
புத்தாண்டு விடுமுறைக்காக 1 ஜனவரி 2025 புதன்கிழமை அன்று, துபாயில் உள்ள அனைத்து பொது பார்க்கிங் பகுதிகளும் (மல்டி லெவல் பார்க்கிங் தவிர) இலவசம் என்று RTA அறிவித்துள்ளது. அதன் பிறகு, ஜனவரி 2, 2025 வியாழன் அன்று கட்டண வாகன நிறுத்தம் மீண்டும் தொடங்கும்.
புர்ஜ் பார்க் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கான பார்க்கிங் மற்றும் ஷட்டில் பேருந்துகள்
சாலை மூடப்படுவதற்கு முன் வரும் பார்வையாளர்கள், துபாய் மால் பார்க்கிங் பகுதிகள், துபாய் ஓபரா பார்க்கிங் 3, பவுல்வர்டு அப்பர் கிரவுண்ட் 2 அல்லது எமார் விற்பனை மையம் ஆகியவற்றில் நிறுத்தலாம்.
சாலை மூடப்பட்ட பிறகு, அல் வாஸ்லில் உள்ள அல் வாஸ்ல் கிளப்பில் அல்லது மேதானில் உள்ள பால்கன் ஹெரிடேஜ் மற்றும் விளையாட்டு மையத்தில் நிறுத்தலாம். அங்கிருந்து, துபாய் ஓபராவில் இறங்கி டவுன்டவுன் துபாய்க்கு இலவச ஷட்டில் பேருந்தில் செல்ல வேண்டும். புர்ஜ் பார்க் கேட் 2 க்குச் சென்று, அணுகலுக்காக உங்கள் பேட்ஜை வழங்கவும்.
துபாய் மெட்ரோ
RTA வெளியிட்ட தகவல்களின் படி, புர்ஜ் கலிஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையம் மாலை 5 மணி வரை அல்லது முழு கொள்ளளவை அடையும் வரை இயங்கும் அதன் பிறகு மூடப்பட்டு விடும்.
பிசினஸ் பே மற்றும் பினான்ஷியல் சென்டர் மெட்ரோ நிலையங்கள்: இந்த நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டிய பின்னரே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிகள்
சாலை மூடப்படுவதற்கு முன்பு டாக்சிகள் வழக்கம் போல் இயங்கும் ஆனால் சாலை மூடல் அமலுக்கு வந்தவுடன் டவுன்டவுன் துபாய்க்கு அணுகல் கிடைக்காது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel