அமீரக செய்திகள்

GCC நாடுகளில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை UAE-க்கு மாற்ற முடியுமா??

சவூதி, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு புலம்பெயர்பவர்கள் GCC ஓட்டுநர் உரிமத்தை UAE ஓட்டுநர் உரிமமாக மாற்ற முடியுமா என்று பலருக்கும் கேள்வி இருக்கலாம். ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்த வரை, பார்வையாளர்களாக அமீரகத்திற்கு சென்றிருந்தால், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்ட உரிமங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே, சுற்றுலாவாசியாக செல்பவர் GCC ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி அமீரகத்தில் வாகனங்களை ஓட்டலாம். ஆனால், UAEயில் ரெசிடென்ஸி விசா பெறும் நபர்கள் UAE ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் GCC குடியிருப்பாளர்களுக்கான நிபந்தனைகள் 

பொதுவாக அமீரக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, அமீரகத்தில் உள்ள ஓட்டுநர் பள்ளிகளில் (driving school) ஒன்றை தேர்வு செய்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் GCC டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள், ஓட்டுநர் வகுப்புகளை எடுக்கத் தேவையில்லை, மேலும் ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனைகளை நேரடியாக எடுக்கலாம், இதில் knowledge அல்லது எழுத்துத் தேர்வு (theory test) மற்றும் சாலை சோதனை (road test) ஆகியவை அடங்கும்.

மேலும் நீங்கள் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதால், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செலவும் குறையும். அத்துடன், அமீரகத்தில் உங்களுக்கான போக்குவரத்துக் கோப்பைத் (traffic file) திறப்பதற்கும், mock test எடுப்பதற்கும், பின்னர் ஒரு தியரி மற்றும் சாலைத் தேர்வுக்கான கட்டணங்கள் ஒரு ஓட்டுநர் பள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு சற்று மாறுபடும், ஆனால் பொதுவாக 2,000 திர்ஹம்ஸ் முதல் 2,500 திர்ஹம்ஸ் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!