அமீரக செய்திகள்

ஷார்ஜா, ஃபுஜைரா, அபுதாபியில் இன்று பெய்த லேசான மழை..!! NCM தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா, ஃபுஜைரா, அபுதாபி ஆகிய எமிரேட்களில் இன்று லேசான மழை பதிவானதாக நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இன்றைய தினம் (டிசம்பர் 11, புதன்கிழமை) மழை பெய்து வந்ததால் வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஷார்ஜாவில் உள்ள அல் நஹ்வா மற்றும் அபுதாபியில் உள்ள வடக்கு பகுதியில் இன்று பிற்பகல் லேசான மழை பெய்ததாகவும், அதேபோன்று ஃபுஜைராவில் உள்ள ஷேக் கலீஃபா ஸ்ட்ரீட்டிலும் லேசான மழை பெய்த்தாகவும் NCM கூறியுள்ளது. முன்னதாக, NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, துபாய் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவியது. அதேசமயம், சில கிழக்கு, வடக்குப் பகுதிகள் மற்றும் தீவுகளில் சில சமயங்களில் மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் வெப்பநிலை 25 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையிலும், மலைப் பகுதிகளில் 17 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரையிலும் இன்று வெப்பநிலை பதிவானதாகவும் NCM தெரிவித்துள்ளது.

மேலும், அமீரகத்தின் ஒரு சில இடங்களில் இன்று பகல் நேரங்களில் 10 முதல் 25 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 35 கிமீ வேகத்திலும் புத்துணர்ச்சியுடன் மிதமான காற்றும் வீசியது. இவற்றுக்கு மத்தியில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் கடல் ஓரளவு அமைதியாகவும் மிதமாகவும் இருந்ததாக தேசிய வானிலை மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!