அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கார், சிறப்பு பரிசுகளை வழங்கும் MOHRE..!! 2 நாள் நடைபெறும் எனத் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகம் நேற்றைய தினம் அதன் 53 வது தேசிய தினத்தைக் கொண்டாடிய நிலையில், “Our Workers’ Happiness in Our Union’s Celebration” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட ‘ஈத் அல் எதிஹாத்’ கொண்டாட்டங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்பதாக அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தெரிவித்துள்ளது.
MOHREஆல் நேற்று தொடங்கப்பட்ட இந்த சிறப்பு கொண்டாட்டங்கள், உள்துறை அமைச்சகம், துபாய் போலீஸ் ஜெனரல் கமாண்ட், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள நகராட்சிகள், தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் ராஸ் அல் கைமா ஃப்ரீ சோன் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
இரண்டு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நாடு தழுவிய இந்த கொண்டாட்டங்களில், கார்களை கிராண்ட் பரிசாக அறிவித்துள்ள ஒரு ரேஃபிள் உட்பட பரந்த அளவிலான பொழுதுபோக்கு நடவடிக்கைகள், போட்டிகள் மற்றும் சிறப்பு பரிசுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், அமைச்சகம் தனது கூட்டாளர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணையாக, தொழிலாளர் விடுதிகளில் பல நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு விழாக்களும் நடத்தப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம் தனது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய தூண்களாக உள்ள அதன் பணியாளர்களை எவ்வாறு ஆதரிக்கிறது மற்றும் நாட்டில் வணிக சிறப்பை வளர்க்கிறது என்பதை இந்த முயற்சிகள் காட்டுகின்றன.
இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அமீரகத்தின் தலைமையின் வழிகாட்டுதலுடன் ஒத்துப்போவதுடன், தொழிலாளர் நிர்வாகத்திற்கான விரிவான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.
MOHREவின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு தொழிலாளர் சந்தை குறிகாட்டிகளில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது, மேலும் தொழிலாளர் நலன்கள் குறித்த பல்வேறு போட்டி குறிகாட்டிகளில் உலகளாவிய தரவரிசையில் முன்னணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel