ADVERTISEMENT

UAE: தொழிலாளர்களுக்கு புதிய சேலரி கார்டை அறிமுகம் செய்த ராஸ் அல் கைமா..!! ஈடன்ரெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்..!!

Published: 7 Dec 2024, 10:53 AM |
Updated: 7 Dec 2024, 10:55 AM |
Posted By: Menaka

அமீரகத்தின் எமிரேட்களில் ஒன்றான ராஸ் அல் கைமாவில் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள அட்டை (salary card) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது குறைந்த வருமானம் பெறுபவர்கள் வங்கியில் கணக்கு தொடங்காமலேயே தங்கள் பணத்தை நிர்வகிக்க எளிதாக்குகிறது என்று நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, ‘C3Pay’ எனப்படும் இந்த ஊதிய அட்டை மூலம், ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்திற்காக வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டியதில்லை. இதற்காக ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலம் (Rakez) உலகளாவிய கட்டண தீர்வுகள் வழங்குநரான ஈடன்ரெட் (EdenRed UAE) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே, தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நேரடியாக இந்த ஊதிய அட்டையில் பெறலாம் மற்றும் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம்கள், கடைகள் மற்றும் ஆன்லைனில் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலத்தின் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ராமி ஜல்லாட் பேசிய போது, இந்த முயற்சியானது குறிப்பாக பாரம்பரிய வங்கிச் சேவைகளை அணுகுவதில் சவால்களை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு, சம்பளம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் நிதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஈடன்ரெட் நிறுவனத்தின் CEO வேல் ஃபக்ரானி, இந்த ஊதிய அட்டைகள் நம்பகமான நிதிக் கருவி என்று கூறியதுடன், இது அனைத்து ஊழியர்களும் தங்கள் தினசரி பரிவர்த்தனைகளை எளிதாகவும் திறமையாகவும் நிர்வகிக்க உதவுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel