துபாய் மெட்ரோ பாலத்திற்கு கீழே பார்க்கிங் செய்யும் வாகன ஓட்டிகள்..!! RTA வெளியிட்ட எச்சரிக்கை..!!

துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தும் குடியிருப்பாளரா நீங்கள்.? உங்கள் காரை மெட்ரோ நிலையத்திற்கு அருகில் பார்க்கிங் செய்து விட்டு மெட்ரோவில் பயணம் செய்ய நினைத்தால், நீங்கள் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் துபாய் மெட்ரோ செல்லும் பாலத்தின் கீழ் காரை நிறுத்தினால், உங்கள் வாகனம் போக்குவரத்து ஆணையத்தால் இழுத்துச் செல்லப்படலாம்.
துபாய் RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உயர்த்தப்பட்ட மெட்ரோ பாதைகளுக்கு கீழே வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை, அது நியமிக்கப்பட்ட பார்க்கிங் வசதி கிடையாது. இந்தப் பகுதிகளில் பார்க்கிங் செய்வது சட்டவிரோதமாகும், அவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் அல்லது அதிகாரிகாளால் வாகனம் இழுத்துச் செல்லப்படும்.
அதுமட்டுமின்றி, மெட்ரோ வழித்தடங்களின் கீழ் வாகனங்களை பார்க்கிங் செய்வது நகரின் நகர்ப்புற நிலப்பரப்பை சீர்குலைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான RTA எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளது.
வாகனத்தை எங்கு நிறுத்த வேண்டும்?
துபாயில் உள்ள பல மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் கட்டண பொது பார்க்கிங் உள்ளது, ஆனால் அத்தகைய பார்க்கிங் இடங்கள் காலியாக இல்லை என்றால், அதற்கு பதிலாக ‘Park and Ride’ வசதிகளைப் பயன்படுத்த RTA பரிந்துரைக்கிறது. இந்த வசதியின் ஒரு பகுதியாக, பயணிகளுக்கு மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் RTA இலவச பார்க்கிங் வழங்குகிறது.
இலவச பார்க்கிங்கை வழங்கும் மெட்ரோ நிலையங்கள்
- ரெட் லைன்- அல் ரஷிதியாவில் உள்ள சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையம்
- ரெட் லைன்- ஜெபல் அலி மெட்ரோ நிலையம்
- கிரீன் லைன்- அல் குசைஸில் உள்ள எதிசலாட் மெட்ரோ நிலையம்
இலவச பார்க்கிங் சேவையை அணுகுவது எப்படி?
இந்த மெட்ரோ நிலையங்களில் இலவச பார்க்கிங்கைப் பயன்படுத்திக் கொள்ள, பார்க்கிங் வசதியின் நுழைவாயிலில் உங்கள் நோல் கார்டை ஸ்கேன் செய்யவும். இதே அட்டையை துபாய் மெட்ரோ பயணத்திற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் திரும்பியதும், வசதியை விட்டு வெளியேற பார்க்கிங் வெளியேறும் வாயிலில் நோல் கார்டை மீண்டும் ஸ்கேன் செய்யவும்.
மெட்ரோவைப் பயன்படுத்தாவிட்டால் பார்க்கிங்கைப் பயன்படுத்தலாமா?
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கு, பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 10 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது, அதிகபட்ச தினசரி கட்டணம் 50 திர்ஹம்ஸ் ஆகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel