ADVERTISEMENT

சவுதி அரேபியாவில் Aramco கட்டிடம் மீது தாக்குதல் முயற்சி – சிறிய அளவில் சேதம்!

Published: 8 Nov 2026, 1:49 PM |
Updated: 8 Nov 2026, 1:50 PM |
Posted By: admin

ரியாத்தில் உள்ள சவூதி அரேபியாவின் அராம்கோ (Aramco ) நிறுவனத்திற்குச் சொந்தமான நிர்வாகக் கட்டிடம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து ஏவுகணையின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்ததைப் லேசான சேதமடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் எந்தக் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏமன் நாட்டின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாலர்கள் சவூதியின் ரியாத்தை நோக்கி ஏவிய இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்தச் சம்பவத்தால் குறைந்த அளவிலான சேதமே ஏற்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அராம்கோ நிறுவனம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை, அதே போல் ஹூதிகளிடமிருந்தும் உடனடியாக எந்த அறிக்கையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்னதாக, சவூதி குடிமைப் பாதுகாப்புப் பிரிவு, அப்பகுதியில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. பின்னர், ஆபத்து நீங்கிவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஹூதிகளுடன் சண்டையிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணி, ரியாத்திலும் சவுதியின் தெற்குப் பகுதியிலும் இரண்டு குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகத் கூறியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜூலையில் இந்த சண்டை தொடங்கியதிலிருந்து, ஹூதிகள் சவூதி விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் மையங்கள் மீதான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பிப்ரவரியில் ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து மீண்டும் மூண்ட பரந்த மத்திய கிழக்கு போரில் இந்த தாக்குதல்களும் மற்றொரு முனையாக மாறியுள்ளன.

அதே போல் சவூதி அரேபியாவும் , யேமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.