அமீரக செய்திகள்

துபாய்: புத்தாண்டில் 7 வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் ஜொலிக்கவுள்ள குளோபல் வில்லேஜ் !! நேரங்களை அறிவித்த நிர்வாகம்….

துபாயின் பிரபலமான குடும்ப பொழுதுபோக்கு இலக்குகளில் ஒன்றான குளோபல் வில்லேஜ் வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2025ஐ வரவேற்க தயாராக உள்ளது. புகழ்பெற்ற இந்த பன்முகக் கலாச்சார பூங்கா, 2025 ம் ஆண்டு புத்தாண்டிற்காக ஏழு முறை வானவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதியன்று துபாயில் உள்ள இந்த பிரபலமான இடமானது குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் பெண்களுக்கு மாலை 4 மணி முதல் அதிகாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமீரகம் உட்பட 7 நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தை கணக்கிட்டு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குளோபல் வில்லேஜ் ஏழு வெவ்வேறு நேர மண்டலங்களில் புத்தாண்டை வரவேற்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வருடங்களாக குளோபல் வில்லேஜ் வெவ்வேறு நேர மண்டலங்களில் புத்தாண்டை வரவேற்று சிறப்பு வானவேடிக்கைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முறை வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் நேரங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வான வேடிக்கைகள் நடத்தப்படும் நேரங்கள்:

  1. இரவு 8 மணி
  2. இரவு 9 மணி
  3. இரவு 10 மணி
  4. இரவு 10.30 மணி
  5. இரவு 11 மணி
  6. காலை 12 மணி
  7. காலை 1 மணி

மேற்கூறிய வானவேடிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர, பார்வையாளர்கள் நேரடி DJ நிகழ்ச்சியையும், பல ரோமிங் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் அனுபவிக்கலாம். மேலும், அங்குள்ள டிராகன் லேக்ஸ்-இன் விளக்குகள் மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் விருந்தினர்களுக்கு இனிமையான அனுபவத்தை உறுதியளிக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஏற்ற இந்த அனுபவங்கள் அனைத்தும் நுழைவுச் சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ‘வீக் டே’ டிக்கெட்டுகள் (ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும், விடுமுறை நாட்கள் தவிர) 25 திர்ஹம்ஸ்
  • ‘எனி டே’ டிக்கெட்டின் விலை 30 திர்ஹம்.

புதிய உணவக பிளாசா உட்பட பூங்காவில் 250க்கும் மேற்பட்ட உணவு விருப்பங்களுடன் உணவுப் பிரியர்கள் ருசித்து மகிழலாம். கூடுதலாக, 90 க்கும் மேற்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டாடும் 30 தனித்துவமான பெவிலியன்களையும், பூங்காவின் சமீபத்திய பொழுதுபோக்கு ஈர்ப்பான எக்ஸோ பிளானட் சிட்டியையும் பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!