அபுதாபி பிக் டிக்கெட்: ஃப்ரீ டிக்கெட்டில் இந்தியருக்கு அடித்த 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்..!!

ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான அரவிந்த் அப்புக்குட்டன் என்பவருக்கு நேற்று (டிசம்பர் 3, செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சமீபத்திய பிக் டிக்கெட் டிராவில் 25 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசு ஜாக்பாட் அடித்துள்ளது. அவர் வாங்கிய 447363 என்ற டிக்கெட் மூலம் இந்த கிராண்ட் பரிசை வென்றுள்ளார். மேலும், அவருக்கு 25 மில்லியன் திர்ஹம் கொடுத்த டிக்கெட் இலவச டிக்கெட் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால் ஒன்று இலவசம் என்பதன் அடிப்படையில் கிடைத்த டிக்கெட்டில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
பிக் டிக்கெட் தொகுப்பாளர்கள், வெற்றியாளர் அரவிந்தை தொலைபேசியில் அழைத்த போது, அவர் ஷாப்பிங் செய்ய வெளியே சென்றிருக்கிறார். டிராவில் ரொக்கப் பரிசு வென்ற செய்தியைக் கூறிய தொகுப்பாளர்கள் “இப்போது நீங்கள் சொந்தமாகவே ஒரு கடையை வைத்திருக்க முடியும்” என்று அவரை கேலியும் செய்துள்ளனர்.
ஷார்ஜாவில் விற்பனையாளராக பணிபுரியும் அரவிந்த், கடந்த 2 ஆண்டுகளாக பிக் டிக்கெட்டுகளை வாங்குவதாகவும், அவர் இந்த கிராண்ட் பரிசை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பரிசுத்தொகையை அவர் 20 பேருடன் பகிர்ந்து கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது, “இப்போதைக்கு, நான் வெற்றிகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். சில கடன்களை செலுத்தி, மீதியை எதிர்காலத்திற்காக சேமிக்கப் போகிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.
பிக் டிக்கெட் டிராவில் கிராண்ட் பரிசுடன், ‘ட்ரீம் கார்’ பரிசு வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டது. இந்த டிராவில் 018422 என்ற டிக்கெட் எண் கொண்ட சவுதி அரேபியாவில் வசிக்கும் பங்களாதேஷ் நாட்டவரான ஹருன் ரஷித் என்பவர் BMW 840I காரை தட்டிச் சென்றுள்ளார்.
மேலும், ‘பிக் வின்’ போட்டியில் நான்கு வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் என்பவர் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசும், கட்டுமானத் தொழிலாளியான எம்.டி.மெஹெதி 50,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையையும், வென்றுள்ளனர். எம்.டி.மெஹெதி தனது பரிசுத் தொகையை 17 பேருடன் பகிர்ந்து கொள்வார்.
இவர்களைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்கும் கேரளாவைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ் என்பவருக்கு டிராவில் 70,000 திர்ஹம்ஸ் கிடைத்துள்ளது. இதேபோல், பிக் டிக்கெட் மூலம் முகமது ஹனெஃப் 75,000 திர்ஹம்ஸ் வென்று உற்சாகம் அடைந்துள்ளார்.
முன்னதாக, பிக் டிக்கெட் நிர்வாகம் டிசம்பர் மாதத்தில் 30 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசை அறிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவலில் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் கிராண்ட் பரிசை வெல்வதுடன், இம்மாதம் நான்கு வாராந்திர இ-டிராக்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீசனில் ‘Big Win Contest’ மீண்டும் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமீரகக் குடியிருப்பாளர்கள் புத்தாண்டில் ‘பிக் வின்’ போட்டியில் ரிங் செய்யலாம், இதில் 20,000 முதல் 150,000 திர்ஹம் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதாவது பிக் டிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டிசம்பர் 1 முதல் 25 வரை, ஒரே பரிவர்த்தனையில் 1,000 திர்ஹம்களுக்கு இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் பங்கேற்பாளர்கள் தானாகவே வாராந்திர டிராவில் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது.
நான்கு வாரங்களில், ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் ஜனவரி 3 நேரடி டிராவின் போது பிக் வின் போட்டிக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இறுதிப் போட்டியாளர்கள் 20,000 திர்ஹம்ஸ் முதல் 150,000 திர்ஹம்ஸ் வரையிலான பரிசுகளை வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிசெய்யப்பட்ட பங்கேற்பாளர்களின் பெயர்கள் பிக் டிக்கெட் இணையதளத்தில் ஜனவரி 1, 2025 அன்று வெளியிடப்படும் என்றும், இறுதி வெற்றியாளர்கள் நேரடியாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தவிர, ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் நேரலை டிராவின் போது ஒரு மசெராட்டி கிரேகேல் (Maserati Grecale) பரிசளிக்கப்படும் என்றும் பரிசுகளில் ஒரு BMW M440iயும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காருக்கான குலுக்கல் பிப்ரவரி 3ம் தேதி 150 திர்ஹம்ஸ் டிக்கெட்டுகளுடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக் டிக்கெட்டில் பங்கேற்க விரும்புபவர்கள், டிக்கெட்டை ஆன்லைனில் பிக் டிக்கெட் இணையதளம் மூலமாகவோ அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் கவுண்டர்களைப் பார்வையிடுவதன் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel