அமீரக செய்திகள்

அபுதாபியில் இயங்கி வந்த இரண்டு தொழிற்சாலைகளை மூட உத்தரவு.!!

அபுதாபியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அபயாமான மாசுபடுத்திகளை அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக அபுதாபியின் சுற்றுச்சூழல் ஏஜென்சி அறிவித்துள்ளது.

மேலும், அவற்றில் ஒன்று சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறிய குற்றத்திற்காக அதற்கு நிதி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏஜென்சி வழக்கமான ஆய்வு வருகைகள் மற்றும் காற்றின் தர கண்காணிப்பு அறிக்கைகள் மூலம், இங்கு மாசுபடுத்திகளின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு நிறுவனம் அனைத்து தொழில்துறை வசதிகளையும் வலியுறுத்தியதுடன், எமிரேட்டில் சுற்றுச்சூழல் தரங்களுடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கான தனது உறுதிப்பாட்டை  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில் எமிரேட்டில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான தாக்கங்களை குறைப்பதற்கும் காற்றின் தரத்தை பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது அபுதாபிக்கு முன்னுரிமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில், காற்றின் தரத்தை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் பிற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் பல மூலோபாய முயற்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துத் துறையில் எரிபொருளை சுத்தமாக பயன்படுத்துவதற்கான திட்டங்கள், மின் உற்பத்தி துறை, நீர் உற்பத்தி மற்றும் சுத்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் ஆகியவை செயல்படுத்தப்பட்டதகக் கூறப்படுகிறது.

கூடுதலாக, வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கும், போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும், ஸ்மார்ட் மேலாண்மை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கும், மின்சாரம் மற்றும் நீருக்கான தேவையை வளர்ப்பதற்குமான திட்டங்களை எமிரேட் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம், காற்றின் தரத்தை பராமரிக்கவும், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தை மறுக்கவும் உதவும் அபிவிருத்தி விருப்பங்களையும் அபுதாபி ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!