அமீரக செய்திகள்

துபாயில் திறக்கப்பட்டுள்ள புதிய பார்க்.. இலவச அனுமதி.. எங்கு தெரியுமா..??

துபாய் முனிசிபாலிட்டியானது அல் அவீர் II பகுதியில் சுமார் 10,500 சதுர மீட்டர் பரப்பளவிலான புதிய குடும்பப் பூங்காவை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள், ஜாகிங் மற்றும் உடற்பயிற்சி தடங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்த பூங்காவில் இருப்பதால், அருகிலுள்ள குடியிருப்பு சமூகங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வசதியாக இந்த பார்க் இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்த பூங்கா அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த பசுமையான இடங்களை பொழுதுபோக்கு மற்றும் சேவை வசதிகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில் உயர்தர படைப்பாற்றலுடன் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பூங்காவின் அழகியலை மேம்படுத்துவதற்காக, காஃப், அல் ஷுரைஷ், ப்ளூமேரியா (இந்திய மல்லிகை), வைக்ஸ் மற்றும் அல்பிசியா உள்ளிட்ட சுற்றுச்சூழல் மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது வசதிகள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பேடர் அன்வாஹி அவர்கள் பேசிய போது “பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் குடும்ப பகுதிகளின் மேம்பாடு துபாய் நகராட்சியின் தற்போதைய திட்டங்களின் முதன்மையானதாகும். துபாய்வாசிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை உயர்த்தும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாயை அதன் அழகியல் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், சிறந்த சமூகங்களை வளர்ப்பதன் மூலமும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலமும் துபாயை மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நிலையான நகரமாக மாற்ற முயல்வதாகக் கூறிய அவர், கூடுதலாக, இந்த முன்னேற்றங்கள் குடும்பங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களிடையே சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!