உலகின் தூய்மையான நகரமாக முதலிடத்தில் உள்ள துபாய்..!! தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு…

ஜப்பானில் உள்ள மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனில் உள்ள ‘Institute for Urban Strategies’ ஆல் வெளியிடப்பட்ட சமீபத்திய குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் (GPCI) அறிக்கையின்படி, உலகளவில் 47 க்கும் மேற்பட்ட நகரங்களை விஞ்சிய துபாய், நகரத்தின் தூய்மையை அளவிடும் மெட்ரிக் அளவீட்டில் 100 சதவீத திருப்தியை அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது.
துபாய் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக, இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை, ஒருங்கிணைந்த உத்திகள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்த, அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து, துபாய் முனிசிபாலிட்டியின் அர்ப்பணிப்பு முயற்சிகளை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவிக்கையில் துபாய் முனிசிபாலிட்டி, உலகத் தரம் வாய்ந்த முனிசிபல் சேவைகளை வழங்குவதன் மூலம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூக மகிழ்ச்சியை மேம்படுத்தவும், வாழவும் வேலை செய்யவும் உலகின் சிறந்த நகரமாக மாற்றும் துபாயின் பார்வையை ஆதரிப்பதாக துபாய் முனிசிபாலிட்டியின் செயல் இயக்குநர் ஜெனரல் மர்வான் பின் கலிதா தெரிவித்துள்ளார்.
தூய்மைப் போராளிகளும் துப்புரவுப் பணிகளும்
இந்த சாதனைக்கு முக்கியப் பங்காற்றிய 3,200க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட துபாய் முனிசிபாலிட்டியின் தூய்மைக் குழுக்களின் முயற்சிகளைப் பாராட்டிப் பேசிய கலிதா, அதன் அர்ப்பணிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நகரத்தின் தரத்தை நிலைநிறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைவதில், பரந்த சமூகத்தின் ஆதரவுடன், பொது மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பின் முக்கிய பங்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் முனிசிபாலிட்டியானது ஒரு அதிநவீன தூய்மை மற்றும் நிலைத்தன்மை அமைப்பை நிர்வகிக்கிறது. இது வருடத்தில் 365 நாட்களும் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்கிறது. சுமார் 855 மேம்பட்ட வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட ஒரு குழுவின் ஆதரவுடன், இந்த அமைப்பு உலகத் தரத்தை பராமரிப்பதில் எமிரேட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
2,400 கிமீ பிரதான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், 1,419 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முதலீட்டு மண்டலங்கள், 33.4 கிமீ நீர் கால்வாய்கள் மற்றும் சிற்றோடைகள், அத்துடன் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் கிராமப்புற பகுதிகள் சந்தைகள் மற்றும் கழிவு சேமிப்பு வசதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் தினசரி துப்புரவுத் திட்டங்கள் முனிசிபாலிட்டியால் மேற்பார்வை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள் Link: Khaleej Tamil Whatsapp Channel