அமீரக செய்திகள்

துபாய் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் இ-ஹைல் டாக்ஸி சேவை!! மக்களிடையே அதிகரிக்கும் பயன்பாடு…!!

துபாயில் இ-ஹைல் டாக்ஸிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக எமிரேட்டின் நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்து ஓட்டம் மேம்பட்டுள்ளதாகவும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இவ்வாறு துபாய்வாசிகள் பாரம்பரிய ஸ்ட்ரீட்-ஹைல் டாக்ஸிகளுக்கு பதிலாக இ-ஹைல் டாக்ஸிகளுக்கு மாறுவது, துபாயில் தினசரி 7,600 வழக்கமான வாகனங்களை சாலைகளில் இருந்து அகற்றுவதற்கு சமம் என்று RTA கூறியுள்ளது.

குறிப்பாக, பீக் ஹவர்ஸில் இ-ஹைலிங்குக்காக அர்ப்பணிக்கப்பட்ட டாக்சிகளை அனுப்புவதன் மூலம் போக்குவரத்து எளிதாக்கப்படுகிறது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போக்கு, டாக்ஸி பயனர்களை இ-புக்கிங் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதால், துபாய் சாலைகளில் டாக்ஸிகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் குறைக்க வழிவகுக்கிறது. ஏனெனில் பெரும்பாலான டாக்சிகள் ஸ்மார்ட் அப்ளிகேஷன்கள் மூலம் முன் பதிவு செய்யப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி அவர்கள் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், இ-ஹெய்ல் மூலம் துபாயின் டாக்ஸி துறையை மாற்றுவதில் RTA குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது என்றும், RTA வின் ஏஜென்சிகள் மற்றும் துறைகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் உத்திகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இ-ஹைல் பயணங்களின் சந்தைப் பங்கில் இந்தத் துறை 16% வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகவும், ஹலாவின் (hala) சந்தைப் பங்கு 2023 இல் 42% இல் இருந்து 2024 இல் 50% ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேகமான சேவை

இந்த சேவையில் பயணிகள் மற்றும் ஓட்டுனர் திருப்தி நிலைகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஷாக்ரி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வெளியான தரவுகளின் படி,  2024 இல் 74%க்கும் அதிகமான இ-புக்கிங் பயணங்கள் 3.5 நிமிடங்களுக்கும் குறைவான காத்திருப்பு நேரத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் நிலைப்பாட்டில் இருந்து, ஷாக்ரி கூறுகையில், இ-ஹைலிங் சேவைக்கு மாறுவது CO2 உமிழ்வை கணிசமாகக் குறைக்க வழிவகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2024 இல் மொத்தம் 20,000 டன்கள் உமிழ்வு குறைக்கப்பட்டதாகவும், வழக்கமான டாக்சி பயணங்களுடன் ஒப்பிடும்போது, ​​இ-ஹைல் சவாரிகளுக்கு சராசரியாக வீணடிக்கப்படும் ஓட்டுநர் தூரத்தை ஒரு பயணத்திற்கு 3 கிமீ குறைப்பதன் மூலம் இந்த சாதனை உந்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!