அமீரக செய்திகள்

ஜனவரி 26 முதல் இரு இந்திய நகரங்களுக்கு பறக்கவுள்ள எமிரேட்ஸின் A350 விமானம்!! விமான நிறுவனம் அறிவிப்பு..!!

துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதன் ஏர்பஸ் A350 விமானத்தை வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு பெரிய இந்திய நகரங்களுக்கு இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு நகரங்களுடன் எமிரேட்ஸின் ஏர்பஸ் A350 இப்போது துபாய் நெட்வொர்க்கில் எடின்பர்க், குவைத் மற்றும் பஹ்ரைன் உட்பட ஐந்து இடங்களுக்குச் சேவை செய்கிறது.

இந்த விமானம் எமிரேட்ஸின் சமீபத்திய இன்டீரியர்களுடன் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் சில அடுத்த தலைமுறை உள் தயாரிப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் பயணிகளுக்கு தனித்துவமான வசதி நிலைகளை உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இரு இடங்களுக்கும் பறக்கவிருக்கும் எமிரேட்ஸின் A350 சேவை நேரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

மும்பை: EK502 மற்றும் EK503 தினசரி விமானங்கள்

EK502 துபாயில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு மும்பையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து திரும்பும் விமானம், EK503, மும்பையில் இருந்து இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு துபாய் வந்தடையும்.

அகமதாபாத்: EK538 மற்றும் EK539 தினசரி விமானங்கள்

EK538 இரவு 10.50 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.55 மணிக்கு அகமதாபாத்தை சென்றடையும். பின்னர் EK539 விமானம் அகமதாபாத்தில் அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு 6.15 மணிக்கு துபாய்க்கு திரும்பும்.

எமிரேட்ஸ் கேரியர் அதன் A350 விமான சேவையை தவிர்த்து, தற்போது மும்பை மற்றும் பெங்களூருக்கு அதன் முதன்மையான A380 விமானத்தில் தினசரி சேவைகளையும் வழங்குகிறது. இதில், வாடிக்கையாளர்கள் பிரீமியம் எகானமி உட்பட நான்கு கேபின் வகுப்புகளை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனமானது வாரத்திற்கு 167 விமானங்களுடன் இந்தியாவில் ஒன்பது இடங்களுக்கு சேவையை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!