UAE லாட்டரியில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இந்தியர்!! 20 டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!!

UAE லாட்டரியின் கடந்த டிராவில் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை பீர் முஹம்மது ஆசாம் என்ற இந்தியர் வென்றுள்ளார். 41 வயதான ஆசாம், துபாயில் மூத்த எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் 20 நண்பர்கள் கொண்ட குழுவுடன் சேர்ந்து 20 டிக்கெட்டுகளை வாங்கிய நிலையில், UAE லாட்டரியில் அவரது கணக்கின் கீழ் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் எண்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவரது டிக்கெட் எண்களில் ஒன்று வெற்றி பெற்ற எண்களுடன் பொருந்தியதால், 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதாகவும், இந்த பரிசை 20 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய ஆசாம், “நாங்கள் வெற்றி பெற்றதை அறிந்ததும் நான் உண்மையில் வாயடைத்துவிட்டேன்; என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தத் தொகையை வைத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சிறந்த விஷயங்களைச் செய்ய உள்ளதாகவும், ஒரு பகுதியை தொண்டுக்கு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, UAE லாட்டரி உரிமம் பெற்றது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரி செயல்பாடுகளை அமீரக அரசு கொண்டு வந்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை தருவதாகவும், மீண்டும் இதில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel