அமீரக செய்திகள்

துபாயின் மாறுபட்ட சாலிக் டோல் கட்டணம்: இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய டோல் கட்டண முறை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, மாறுபட்ட சாலை கட்டண விலையை (Variable Road Toll Pricing – salik) செயல்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் புதிய மாறுபட்ட சாலை சுங்க கட்டண முறை நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்திருந்தது. அதிகாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், புதிய கட்டணங்கள், பீக் ஹவர் நேரம் (peak hour time) மற்றும் துபாயில் சாலிக் டோல் கேட் அமைந்துள்ள இடங்கள் ஆகிய முழுவிபரங்களையும் குடியிருப்பாளர்கள் தெரிந்து கொண்டால் அவர்களின் பயணத்தை திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும். அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

Salik's Variable Road Toll Pricing is set to launch by the end of January 2025, marking a significant step in enhancing traffic flow across Dubai. The new system aims to ease congestion while ensuring smoother journeys for all road users.

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வார நாட்களில், போக்குவரத்து அதிகமுள்ள காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டோல் கட்டணம் 6 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகன நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் சாலிக் கேட் வழியாக பயணிப்பதற்கான கட்டணம் 4 திர்ஹம்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், பொது விடுமுறைகள், சிறப்பு நிகழ்வுகள் அல்லது முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹம்ஸ் ஆகவும், அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது சாலிக் இலவசம்?

ஷேக் சையத் சாலையில் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சாலிக் கேட் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லா இலவச பயணத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலிக் கேட் அமைந்துள்ள இடங்கள்

  1. ஜெபல் அலி (ஷேக் சயீத் சாலை)
  2. அல் மம்சார் சவுத் (அல் இத்திஹாத் சாலை)
  3. அல் மம்சார் நார்த் (அல் இத்திஹாத் சாலை)
  4. அல் சஃபா நார்த் கேட் (ஷேக் சயீத் சாலை)
  5. ஏர்போர்ட் டன்னல் (பெய்ரூட் தெரு)
  6. அல் பர்ஷா (ஷேக் சயீத் சாலை)
  7. அல் கர்ஹூத் பிரிட்ஜ் (ஷேக் சயீத் சாலை)
  8. அல் மக்தூம் பிரிட்ஜ் (உம்ம் ஹுரைர் சாலை)
  9. பிஸினஸ் பே கிராசிங்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!