வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: துபாய் மற்றும் அபுதாபியில் சாலை மூடல் அறிவிப்பு!!

துபாயில் உள்ள 5 சாலைகள் நாளை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. நாளை (பிப்ரவரி 2, ஞாயிற்றுக்கிழமையன்று) ‘L’Étape Dubai Cycling Race 2025’ பந்தயம் நடைபெறவிருப்பதால், ஓத் மேத்தா சாலை, துபாய்-அல் அய்ன் சாலை, ஷேக் சையத் பின் ஹம்தான் சாலை, எக்ஸ்போ சாலை மற்றும் லஹ்பாப் ஸ்ட்ரீட் ஆகிய சாலைகள் தற்காலிக மூடலைச் சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பந்தயத்தின் இறுதி வரை, ராஸ் அல் கோர் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகிய மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், தங்கள் இலக்குகளை சரியான நேரத்தில் அடைவதற்கு பயணங்களைத் திட்டமிட்டு, முன்கூட்டியே புறப்படுமாறும் வாகன ஓட்டிகளை RTA கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சைக்கிளிங் பந்தயம் துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட்டிலிருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி எக்ஸ்போ சிட்டியில் முடிவடையும். இது மொத்தம் 101 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது.
L’Étape Dubai by Tour de France இன் முக்கிய பந்தயமானது அனைத்து திறன் நிலைகளிலும் உள்ள சைக்கிள் ஓட்டுநர்கள் இரண்டு வெவ்வேறு வழிகளில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கும்: ‘தி ரேஸ்’ என பெயரிடப்பட்ட அனுபவமுள்ள ரைடர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 101 கிமீ பந்தையம் மற்றும் சவாலை விரும்பும் ஆர்வலர்களுக்கு ஏற்ற ‘தி ரைடு’ எனப்படும் 50 கிமீ பாதை. இந்த இரண்டு பந்தயங்களும் துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட்டிலிருந்து (டி3) புறப்பட்டு எக்ஸ்போ வில்லேஜில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அபுதாபியில் உள்ள அல் அய்னில் ஒரு முக்கிய சாலையின் ஒரு பகுதி ஒரு மாதத்திற்கு மூடப்படும் என்று அபுதாபியின் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அபுதாபி மொபிலிட்டி வெளியிட்ட அறிக்கையில், அல் அய்னில் உள்ள ஷேக் கலீஃபா பின் சையத் தெருவில் பகுதி மூடல் பிப்ரவரி 1, சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் மார்ச் 1, சனிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் போக்குவரத்து எதிர் பக்கத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, AD மொபிலிட்டி கடந்த ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 17, வியாழன் வரை அல் அய்னில் உள்ள ஹஸ்ஸா பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் தற்காலிகமாக மூடலை அறிவித்திருந்தது. இதற்கிடையில், AD மொபிலிட்டி ஜனவரி 30, வியாழக்கிழமை, கனரக வாகனங்களுக்கான திருத்தப்பட்ட மாலை கட்டுப்பாட்டு நேரங்களை அறிவித்தது.
இது சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அபுதாபி நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகாரத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சி ஜனவரி 27 அன்று முடிவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து எமிரேட் முழுவதும் மென்மையான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel