அபுதாபி: உணவுப் பாதுகாப்பை மீறியதற்காக தமிழக உணவகத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள்…

அபுதாபியில் செயல்பட்டு வரும் பிரபலமான உணவகம் ஒன்றில் உணவுப் பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான செய்திகளின் படி, ஹம்தான் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள ‘Spicy Restaurant Tamil Nadu’ என்ற உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மீறல்கள் கண்டறியப்பட்டதாகவும், இதன் விளைவாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அபுதாபியில் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தும் குற்றங்கள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகையால், பாதுகாப்பு தரங்களுடன் நிறுவனங்களின் இணக்கத்தை உறுதி செய்வதற்காக எமிரேட் முழுவதும் தொடர்ந்து அதிகாரிகளால் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இது போன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 2024 ஆம் ஆண்டு, பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக எமிரேட்டில் உள்ள பல உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel