துபாய்: முக்கிய பகுதிகளை கார் இல்லாத, பாதசாரிகளுக்கு ஏற்றவாறு மாற்றும் சூப்பர் ப்ளாக் திட்டம் அறிமுகம்..!!

துபாயில் உள்ள முக்கிய குடியிருப்பு பகுதிகளை கார் இல்லாத, பாதசாரிகளுக்கு ஏற்ற மண்டலங்களாக மாற்ற சூப்பர் பிளாக் (Super Block) என்ற முன்முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்களின் படி, அல் ஃபாஹிதி, அபு ஹைல், அல் கராமா மற்றும் அல் கூஸ் கிரியேட்டிவ் மண்டலம் ஆகியவை இந்த மாற்றத்தால் பயனடையும் முதல் பகுதிகளாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பசுமை இடங்களை அதிகரிப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், பகிரப்பட்ட பொழுதுபோக்கு பொது இடங்கள் மூலம் சமூக தொடர்புகளை வளர்ப்பதற்கும் பாதசாரிகள் சார்பு மண்டலங்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் பட்டத்து இளவரசர், துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், சூப்பர் பிளாக் முன்முயற்சி குறித்து X தளத்தில் அறிவித்தைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. சமீபதில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சி, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுப்புறங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்திற்கு ஏற்ப உள்ளது.
துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பசுமையான எதிர்காலத்திற்கான துபாயின் பரந்த பார்வையுடன் இந்த முன்முயற்சி இணைந்துள்ளது. இந்தத் திட்டம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மேலும் நிலையான நகர்ப்புற சூழலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
எமிரேட்டின் மற்ற முன்முயற்சிகள்
Dubai Quality of Life Strategy 2033 இன் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான நல்வாழ்வு விடுதிக்கான திட்டத்தை துபாய் வெளியிட்டுள்ளது. ஜபீல் பூங்காவில் உள்ள ‘Therme Dubai’ மேம்பாட்டிற்காக நகரம் 2 பில்லியன் திர்ஹம்களை ஒதுக்கியுள்ளதாகவும், இது 2028 இல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துபாய் நகரம் முழுவதும் 160 பகுதிகளில் 6,500 கிமீ நவீன நடைபாதை நெட்வொர்க்கிற்கான வரைபடத்தை உருவாக்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் பாதசாரி அணுகலை மேம்படுத்துவதையும், மென்மையான இயக்கம் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், பசுமையான எமிரேட்டை உருவாக்கவும் உதவுகிறது.
மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துபாய் வாக் (dubai walk) மாஸ்டர் திட்டத்தில் 2040 க்குள் 3,300 கி.மீ புதிய நடைபாதைகள் மற்றும் 2,300 தற்போதைய பாதைகளை மறுசீரமைப்பது அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel