அமீரக செய்திகள்

துபாயில் உருவாகும் ‘புதிய ஏர்போர்ட் சிட்டி’..!! 128 பில்லியன் திர்ஹம்ஸில் பயணிகள் டெர்மினல்.. ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு..!!

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவாகவிருக்கும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் (DWC) புதிய பயணிகள் முனையத்தின் (passanger terminal) கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் அப்பகுதியில் மக்கள்தொகை அதிகரிக்கும் என துபாய் சவுத் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் எதிர்பார்ப்பதாக ஒரு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் என்றழைக்கப்படும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 128 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பயணிகள் முனையம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டதும் தற்போதைய துபாய் விமான நிலையத்தின் (DXB) செயல்பாட்டை முழுமையாக உள்வாங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சுமார் 25,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட, மாஸ்டர் டெவலப்மென்ட்டின் குடியிருப்பு மாவட்டத்தில், விமான நிலையம் திறக்கப்பட்டதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்பகுதிக்கு இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக துபாய் ஒரு ஏரோட்ரோபோலிஸ் (aerotropolis) எனப்படும் ஒரு ஏர்போர்ட் சிட்டியை உருவாக்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏரோட்ரோபோலிஸ் என்பது ஒரு விமான நிலையத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டு மாதிரியைக் குறிக்கும் கான்செப்ட் ஆகும்.

முன்னதாக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளின் படி, துபாய் சவுத் ஏற்கனவே எமிரேட் முழுவதும் புதிய மேம்பாடுகளுக்கு தேவைப்படும் முதல் ஐந்து பகுதிகளில் ஒன்றாக உள்ளது. புதிய பயணிகள் முனையத்தின் அறிவிப்பு காரணமாக, இப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதால், துபாய் சவுத்தில் உள்ள சொத்துக்களுக்கான தேவையை மேலும் பெருக்கியுள்ளது என்றும், ஆரம்பகால முதலீட்டாளர்கள் மிகவும் பயனடைவார்கள் என்றும் துபாய் சவுத் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நபில் அல் கின்டி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவிக்கையில் ”145 சதுர கிமீ மாஸ்டர் டெவலப்மென்ட் திட்டமானது துபாயின் மிகப்பெரிய, பல்வேறு பயன்பாட்டு மற்றும் குடியிருப்பு சமூகங்களுடன் விமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் கவனம் செலுத்தும் ஒரு திட்டமாகும். அதன் சுற்றுச்சூழல் அமைப்பு 500,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இது காற்று, நிலம் மற்றும் கடல் ஆகியவற்றை இணைக்கும் பல்வேறு போக்குவரத்து உள்கட்டமைப்பை கொண்டிருக்கும்” என்று நிறுவனத்தின் வலைத்தளைத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் முழுமையாக செயல்பட்டவுடன், எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முக்கிய மையமாக நகர்ப்புற மேம்பாடு வெளிப்படும் என்று எதிர்பார்க்ப்பதாக அல் கிண்டி கூறியுள்ளார். புதிய பயணிகள் முனையம் துபாய் சவுத் பகுதியில் வேலை வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறிய அவர், இது புதிய சொத்துக்கள், அலுவலகங்கள், சில்லறை வணிகம், மருத்துவமனைகள் மற்றும் பிற சமூக உள்கட்டமைப்புகளுக்கு ஒரு உந்துதலாக செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சமூகத்தில் வில்லாக்கள், டவுன்ஹவுஸ்கள், மாளிகைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பல குடியிருப்பு விருப்பங்கள் உள்ளன என்பதையும் வெளிப்படுத்திய கின்டி, “நிறுவனம், நிறுவப்பட்டதிலிருந்து பல திட்டங்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது, அவை குறிப்பிடத்தக்க ஆர்வத்தைப் பெற்றன, முழுமையான விற்பனையை அடைகின்றன. இந்த திட்டங்களில் தி பல்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், தி பல்ஸ் வில்லாஸ், தி பல்ஸ் பீச் ஃபிரண்ட், சவுத் பே, சவுத் லிவிங் மற்றும் சகானி (Sakany) ஆகியவை அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

288 யூனிட்களை கொண்ட பல்ஸ் பீச் ஃபிரண்டின் முதல் கட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது. நடப்பாண்டின் முதல் அரையாண்டின் இறுதிக்குள் இதே திட்டத்தின் மற்ற கட்டங்களில் கூடுதலாக 500 யூனிட்களை வழங்குவதற்கான பாதையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சவுத் லிவிங் என்ற மற்றொரு திட்டம் விற்றுத் தீர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் சொத்து மேம்பாட்டாளரான BT Properties உடனான ஒப்பந்தம், துபாய் சவுத்தின் கோல்ஃப் மாவட்டத்திற்குள் ஒரு பெரிய சமூகத்தின் (gated master community) வளர்ச்சியைக் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!