அபுதாபியில் வாகனம் ஓட்டுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய சாலை விதிகள் என்ன..?? முழு விபரம் உள்ளே..

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமலில் உள்ளன. மேலும் சாலை விதிகளை கடைபிடிக்கத் தவறியவர்கள் கடும் அபராதம் மற்றும் ப்ளாக் பாயின்ட், வாகனம் பறிமுதல் போன்ற சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு வாகனம் ஓட்டிச் செல்ல திட்டமிட்டால் மற்றும் அதன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிமுகமில்லாதவர்கள் என்றால், எமிரேட்டின் தனித்துவமான சாலை விதிகள், அதன் போக்குவரத்து எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட வேக வரம்புகள் உள்ளிட்டவற்றை அறிந்திருப்பது முக்கியம். சில முக்கிய விதிமுறைகளைப் புரிந்துகொள்ள உதவும் எளிய வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
1. வேக வரம்புகள் (no grace speed allowance)
அபுதாபியில் வேக வரம்புகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபடுகின்றன. அதாவது, அபுதாபியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை 1 கிலோமீட்டர் கூட தாண்டினாலும், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா போன்ற பிற எமிரேட்டுகள் மணிக்கு 20 கி.மீ. வேக வரம்பை விட தாண்டினால் மட்டுமே அபராதம் விதிக்கின்றன.
அதாவது சைன்போர்டில் 80 கிமீ என போடப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் அபுதாபி தவிர்த்து மற்ற எமிரேட்டுகளில் 100 கிமீ வரை ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படாது. அதே நேரத்தில் அபுதாபியை பொறுத்தவரை 81 கிமீ வேகத்தில் சென்றாலே அபராதம் விதிக்கப்படும். இந்த விதி கடந்த 2018 முதல் நடைமுறையில் உள்ளது.
2. E311 நெடுஞ்சாலையில் குறைந்தபட்ச வேகம்
ஷேக் முகமது பின் ரஷீத் சாலையில் (E311), இடதுபுறத்தில் இருந்து முதல் இரண்டு பாதைகளில் குறைந்தபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கிமீ/மணி வரை உள்ளது. இதை விட மெதுவாக ஓட்டினால், உங்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம். வலதுபுறத்தில் உள்ள பாதைகள் (அதிகபட்சம் 140 கிமீ/மணி வேகத்துடன்) கனரக வாகனங்களுக்கானவை, இங்கு குறைந்தபட்ச வேக விதி இல்லை. குறைந்தபட்ச வேக வரம்பைக் காட்டும் அறிகுறிகளை எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
3. சாலை எச்சரிக்கை அமைப்பு
நீங்கள் அபுதாபியின் சாலைகளில் வாகனம் ஓட்டும் போது, சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் ஒளிரும் விளக்குகளைக் கொண்ட போக்குவரத்து அறிகுறிகளை கவனித்திருக்கலாம். இவை நீங்கள் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து சம்பவங்கள் மற்றும் வானிலை நிலைமைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சாலை எச்சரிக்கை முறை தெரிவிக்கும் போக்குவரத்து அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- சிவப்பு மற்றும் நீல விளக்குகள்: இந்த விளக்குகள் ஒளிர்ந்தால், நீங்கள் செல்லும் வழியில் முன்னால் ஒரு விபத்து இருப்பதாக அர்த்தம், எனவே மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் ஓட்ட வேண்டும்.
- மஞ்சள் விளக்குகள்: இவை மூடுபனி அல்லது மழை அல்லது பிற சாலை பிரச்சினைகள் போன்ற மோசமான வானிலை குறித்து எச்சரிக்கின்றன.
இந்த விளக்குகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் 200 மீட்டர் தூரத்திலிருந்து தெளிவாகக் காணலாம். எனவே நீங்கள் அதற்கேற்ப வாகனம் ஓட்டுவதற்கு நேரம் கிடைக்கும்.
4. AI- மூலம் இயங்கும் போக்குவரத்து ரேடார்கள் மற்றும் கேமராக்கள்
அபுதாபி முழுவதும் போக்குவரத்து விதிகளை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (AI) உடன் ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் பின்வரும் மீறல்களைக் கண்டறிந்துள்ளன:
- பாதசாரிகளுக்கு வழிவிடத் தவறியது
- ஆபத்தான பகுதிகளில் முந்துதல்
- போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல்
- எக்ஸிட் பகுதியில் திடீரென பாதையை மாற்றுதல்
- மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் அல்லது வாகனம் ஓட்டும்போது கவனத்தைச் சிதறடித்து ஓட்டுவது
- திடீர் திருப்பம் (sudden swerving), அதாவது ஒரு ஓட்டுநர் கவனம் செலுத்தவில்லை என்று பொருள்
வாகன கவனம் மற்றும் பாதுகாப்பு டிராக்கர் (VAST-Vehicular Attention and Safety Tracker) என்பது ஒரு சிறப்பு ரேடார் அமைப்பாகும், இது வாகன ஓட்டிகளை மொபைல் போன்களைப் பயன்படுத்துவது அல்லது வாகனம் ஓட்டும்போது பிற கவனச்சிதறல்களில் ஈடுபடுவதைக் கண்டறிகிறது.
5. ஸ்மார்ட் கேட்ஸ்
அபுதாபியில் உள்ள ஸ்மார்ட் கேட்ஸ் போக்குவரத்து எச்சரிக்கைகளைக் காண்பிப்பதுடன் கூடுதல் சேவைகளையும் செய்கிறது. பின்வரும் போக்குவரத்து மீறல்களையும் அவை தானாகவே கண்டறியும்:
- வேக வரம்பு மீறல்கள்
- காலாவதியான வாகன பதிவுடன் வாகனம் ஓட்டுதல்
- பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டுதல், மற்ற கார்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்காமல் செல்லுதல்
மேற்கூறப்பட்டுள்ள விதிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் அபுதாபியில் மிகவும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் மற்றும் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel