அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE: வேலைவாய்ப்பு அல்லது ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்ட பிறகு எவ்வளவு காலம் நாட்டில் தங்கியிருக்கலாம்..??

ஐக்கிய அரபு அமீரக நாடானது விசா விதிமுறைகளில் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. பொதுவாகவே விசாவில் ஒரு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் தனது விசா காலம் முடியும் தருவாயில் நாட்டை விட்டு வெளியேறுவது கட்டயா நடைமுறையாகும். அமீரகத்தை பொறுத்தவரை கேன்சல் செய்யப்பட்ட விசாவுடன் தங்கியிருப்பது சட்டவிரோதமாகும். நீங்கள் அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் சரி, UAE பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தயாரான ஒரு வெளிநாட்டு மாணவராக இருந்தாலும் சரி, உங்கள் ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்ட பின்னர் உங்களுக்கு வழங்கப்படும் சலுகைக் காலம் பற்றிய விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், ஒருவரின் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அல்லது பணி அனுமதி ரத்து செய்யப்படும்போது, ​​அவரது ரெசிடென்ஸி விசாவும் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், ஒரு புதிய விசாவைப் பெறுவதற்கு அல்லது நாட்டை விட்டு வெளியேற அமீரக அரசால் ஒரு சலுகை காலம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காலமானது விசா வகை மற்றும் தகுதியைப் பொறுத்து மாறுபடும்.

UAE ரெசிடென்ஸி விசா ரத்து செயல்முறை

சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) மூலம் விசா ரத்துசெய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முதலாளி பொறுப்பு ஆகும். மேலும், இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக ரத்துசெய்யும் விண்ணப்பத்தில் தொழிலாளர் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்படுகிறது.

உங்களின் வேலைவாய்ப்பு விசா ரத்து செய்யப்பட்ட பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும்போது புதிய பணி விசாவிற்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் உங்களுக்கு உள்ளது. இருப்பினும், ரத்துசெய்தல் சரியாக செய்யப்பட்டது என்பதை உங்கள் முன்னாள் முதலாளியுடன் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், நீங்கள் ஒரு புதிய முதலாளியிடம் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், அவர்கள் உங்களுக்காக ஒரு புதிய பணி அனுமதி மற்றும் ரெசிடென்ஸி விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

விசா ரத்து செய்யப்பட்ட பிறகு சலுகை காலம்

உங்கள் ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்டவுடன், புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற உங்களுக்கு ஒரு சலுகை காலம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைதேடுபவர்களுக்காக ‘jobseeker visa’ வழங்கப்படுகிறது, இது நீங்கள் ஒரு வேலையைத் தேடும்போது 60, 90 அல்லது 120 நாட்களுக்கு நாட்டில் தங்க அனுமதிக்கிறது. இந்த விசாவிற்கு தகுதி பெற, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டும் மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

நிபுணர்களின் பரிந்துரையின் படி, “ஒரு ரெசிடென்ஸி விசா ரத்து செய்யப்பட்டவுடன், ஒரு நபர் அமீரகத்தை விட்டு வெளியேறாமல் விசா நிலையை மாற்றுவதைத் தேர்வுசெய்யலாம். இந்த செயல்முறை, பொதுவாக ‘change status’ என்று குறிப்பிடப்படுகிறது, இது ஒரு அமர் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் மூலம் எளிதாக்கப்படலாம். குறிப்பாக, விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்களை செலுத்த வேண்டும், இது பொதுவாக 550 திர்ஹம்ஸ் மற்றும் 650 திர்ஹம்ஸ்க்கு இடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விசா வகையும் சலுகைக் காலமும்

ஒரு ரெசிடென்ஸி விசா ரத்துசெய்யப்பட்ட பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் ஒரு சலுகை காலத்தை வழங்குகிறது, இதன் போது தனிநபர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நாட்டிலிருந்து வெளியேறலாம். பொதுவாக, பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தங்கள் ரெசிடென்ஸி விசாவை ரத்து செய்த பிறகு அல்லது காலாவதியான 30 முதல் 60 நாட்கள் வரை நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில், இது விசா வகை மற்றும் வகையைப் பொறுத்து 180 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நடைமுறையில், விசா வகை மற்றும் திறன் வகையின் மதிப்பீட்டை உள்ளடக்கிய ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தின் மறுஆய்வு செயல்முறையைப் பொறுத்து, அதிகாரிகளின் விருப்பப்படி சலுகைக் காலங்கள் வழங்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.

நீட்டிக்கப்பட்ட 180 நாள் சலுகைக் காலத்திற்கு யார் தகுதியுடையவர்கள்?

  • கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
  • கிரீன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
  • தங்களின் துணையை இழந்த அமீரகத்தில் வசிக்கும் ஒரு வெளிநாட்டினர் அல்லது விவாகரத்து பெற்ற வெளிநாட்டினர்
  • தங்கள் படிப்பை முடித்த பிறகு மேலும் படிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளால் ஸ்பான்சர் பெறும் மாணவர்கள்
  • வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களின் பெற்றோர், துணைவர்கள் அல்லது குழந்தைகள்

MOHRE வகைப்பாட்டின் படி பட்டியலிடப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாம் நிலைகளின் திறமையான தொழில்களைக் கொண்ட வெளிநாட்டவர்கள் ஆறு மாத சலுகை காலத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதை ICP கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தெளிவுபடுத்தியிருந்தது.

சலுகை காலம் எப்போது தொடங்கும்?

இலவச மண்டலம் என்று சொல்லக்கூடிய ஃப்ரீ ஸோன்களில் (free zones), ரெசிடென்ஸி பெர்மிட் ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து சலுகை காலம் தொடங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், mainland என்று சொல்லக்கூடிய பிரதான நிலப்பரப்பு அதிகார வரம்பைப் பொறுத்தவரை, தொழிலாளர் அட்டையை (labor card) ரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து சலுகைக் காலம் தொடங்குகிறது.

எனவே, நீங்கள் குறிப்பிட்ட சலுகை காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சலுகை காலம் முடிவதற்குள் விசா நிலையை திருத்த வேண்டும். நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் ரெசிடென்ஸி பெர்மிட் (resident permit cancellation) ரத்து செய்த காலத்திற்கு பதிலாக பணி ரத்து (labor cancellation) செய்யப்பட்ட காலத்திலிருந்து சலுகை காலத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேற்கூறிய விதிகளின் படி, எந்தவொரு வெளிநாட்டவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறத் தவறினாலோ அல்லது சலுகைக் காலத்தின் முடிவுக்கு முன்னர் அவர்களின் விசா நிலையை திருத்தத் தவறினாலோ அதிக அபராதம் விதிக்கப்படும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர். ICP இணையதளத்தின் படி, ஓவர்ஸ்டே அபராதம் நாளொன்றுக்கு 50 திர்ஹம்ஸ் வீதம் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகைக் காலத்தை சரிபார்ப்பது எப்படி?

UAE இன் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான (ICP) ஸ்மார்ட் சேவைகள் போர்டல் – https://smartservices.icp.gov.ae/ மூலம் உங்கள் சலுகைக் காலத்தை சில நிமிடங்களில் ஆன்லைனில் எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!