அமீரகத்தில் ‘மெடிக்கல் இன்டர்ன்ஷிப்’ பெற வேண்டுமா..?? அரசு தளங்களில் விண்ணப்பிப்பது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ பட்டதாரிகளுக்கான வாய்ப்புகளை இன்டர்ன்ஷிப் மூலம் பெற விரும்புபவர்களா நீங்கள்? உங்களுக்கான சில பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் காணலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில், மருத்துவத் துறையில் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளம் பட்டதாரிகளுக்கு உதவக்கூடிய அரசு சுகாதார ஆணையங்களின் அரசாங்க தளங்கள் உள்ளன. இந்த இன்டர்ன்ஷிப்பானது நடைமுறை அனுபவத்தைப் பெற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
அபுதாபி
அபுதாபியில் சுகாதாரத் துறையின் (DOH) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அபுதாபியில் உள்ள இன்டர்ன்ஷிப் திட்டம் மருத்துவ (medical and dental) திட்டங்களின் பட்டதாரிகளுக்கு “supervised clinical practice” பயிற்சியை தொடர வாய்ப்பளிக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் http://Https://www.doh.gov.ae/ ஐப் பார்வையிடவும்
- அதில் “Initiatives and Programs” ஐ தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது, கீழ்தோன்றும் மெனுவில் “Programs and Campaigns” என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள “Medical Education” என்பதைக் கிளிக் செய்யவும்.
- தொடர்ந்து, பக்கத்தின் அடிப்பகுதியில் ஸ்க்ரோல் செய்து, “Intermediate Training Program” என்ற விருப்பத்தின் கீழ் “Internship Program” என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், “Start the application here” என்பதைக் கிளிக் செய்து, UAEPASS உடன் உள்நுழைவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
தேவையான ஆவணங்கள்
- சமீபத்திய புகைப்படம்
- பாஸ்போர்ட் நகல்
- UAE ரெசிடென்சி விசா (இருந்தால்)
- எமிரேட்ஸ் ஐடி (இருந்தால்)
- பட்டமளிப்பு சான்றிதழ் – வெளிநாட்டினருக்கு 2 வருடத்திற்கு குறைவானதாக இருக்க வேண்டும் மற்றும் அமீரக குடிமக்களுக்கு 10 வருடத்திற்கு குறைவானதாக இருக்க வேண்டும்
- தெளிவான GPA அல்லது சதவீதத்துடன் டிரான்ஸ்கிரிப்ட்:
- UAE குடிமக்கள்: குறைந்தபட்ச GPA அல்லது சதவீதம் இல்லை
- UAE பட்டதாரி: குறைந்தபட்ச GPA 2.5 அல்லது 75% சதவீதம்
- சர்வதேச விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்ச GPA 3.5 அல்லது 85% சதவீதம்
- CV – சுயவிவரம்
- தற்போதைய முதலாளி அல்லது ஸ்பான்சரிடமிருந்து ஆட்சேபனை இல்லா கடிதம் (NOC- No Objection Certificate).
- சர்வதேச விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பட்டம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டது என்பதற்கான சான்று அல்லது IELTS (International English Language Testing System) கல்வியில் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் அல்லது TOEFL-ல் (Test Of English as a Foreign Language) 79 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல், அல்லது OET-ல் (Occupational English Test) C மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
மேற்கூறியவை தவிர, DOH இன் மதிப்பாய்வின் அடிப்படையில், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம். மேலும் தகவலுக்கு, https://www.doh.gov.ae/ ஐப் பார்வையிடலாம்.
துபாய்
துபாய் ஹெல்த் அத்தாரிட்டி மருத்துவ மற்றும் பல் மருத்துவ பட்டதாரிகளுக்கு நடைமுறைப் பயிற்சி அளிக்கும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் பட்டதாரிகள் தங்கள் படிப்பின் போது பெற்ற அறிவு மற்றும் திறன்களை நிஜ உலக அமைப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இன்டர்ன்ஷிப் திட்டங்களின் காலம் ஒரு வருடமாகும். மருத்துவத்திற்கு ஆகஸ்ட் மாதமும், பல் மருத்துவத்திற்கு செப்டம்பர் மாதமும் இன்டர்ன்ஷிப் தொடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் http://Https://dha.gov.ae/ஐப் பார்வையிடவும்
- மெனுவில் “Medical Education” என்பதைக் கிளிக் செய்து, பின்னர் “Medical Education and Research” என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, “Unified Internship Program in Dubai” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- அடுத்த படியாக, “Click here to apply” என்பதைக் கிளிக் செய்து, UAEPASS அல்லது DHA அக்கவுண்ட்டில் உள்நுழையவும்
தேவையான ஆவணங்கள்
- பட்டப்படிப்பு சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றால் பட்டப்படிப்பை உறுதிப்படுத்தும் “To whom it may concern” கடிதம் தேவைப்படும். மேலும், DHA மருத்துவ இன்டர்ன்ஷிப் பயிற்சி ஆண்டு தொடக்க தேதிக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பதாரர் சான்றிதழை வழங்குவதற்கான வாக்குறுதியையும் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர் கல்வி அமைச்சகம் மற்றும் தான் மருத்துவ படிப்பு படித்த நாட்டில் உள்ள அமீரக தூதரகத்தால் சான்றிதழ் சான்றளிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கான பாஸ்போர்ட் நகல்
- ஆங்கில மொழி புலமை சான்றிதழ் – TOEFL 550 அல்லது அதற்கு மேல் / IELTS கல்வி 6 அல்லது அதற்கு மேல் / OET 300 (C+)
- Educational Credential Evaluators- அமீரகத்திற்கு வெளியே பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் கிரேடு சராசரி மதிப்பீட்டைக் கொண்ட ஜெனரல் டிரான்ஸ்கிரிப்டுகளை மதிப்பிட வேண்டும் மற்றும் நிலையான GPA ஐக் கொண்டிருக்க வேண்டும்
- 230 திர்ஹம்ஸ் வரை விண்ணப்ப செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
- CV
- எமிரேட்ஸ் ஐடி நகல்
மேற்கூறியவை தவிர, பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, dha.gov.ae ஐப் பார்வையிடவும்
எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீஸ்
துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள மருத்துவ இன்டர்ன்ஷிப்பிற்கு கூடுதலாக, எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸும் (EHS) இன்டர்ன்ஷிப் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் பட்டதாரிகள் தங்கள் பல்கலைக்கழக ஆய்வின் போது பெற்ற மருத்துவ அறிவை மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் மருத்துவப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கின்றன என்று EHSஇன் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பதாரர்கள் சமீபத்திய பட்டதாரிகளாக இருக்க வேண்டும், தங்கள் படிப்பை முடித்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அனைத்து நாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கும் இந்த திட்டம் திறந்திருக்கும் என்றாலும், அமீரக நாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. EHS இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான பதிவு ஒவ்வொரு ஆண்டும் மே 1 முதல் ஜூன் 15 வரை திறந்திருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் http://Ehs.gov.ae ஐப் பார்வையிடவும்
- அதில் “Services” என்பதைக் கிளிக் செய்யவும்
- இப்போது, “Training and Development Services” இன் கீழ் “Read more” என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிறகு, சேவைகள் பட்டியலில், “Request for Registration in the internship Programs” என்ற விருப்பத்தை அடையும் வரை தேடவும்.
- அடுத்தபடியாக, “Request for Registration in the internship Programs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இறுதியாக, “Start Service” என்பதைக் கிளிக் செய்து, அறிவுறுத்தப்பட்டபடி UAE பாஸுடன் உள்நுழையவும்.
விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவலுக்கு, ehs.gov.ae ஐப் பார்வையிடவும்
தேவையான ஆவணங்கள்
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்
- செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி நகல்
- கல்வி சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல்
- கல்வி டிரான்ஸ்கிரிப்ட் நகல்
- பிறப்பு சான்றிதழ் நகல்
- செல்லுபடியாகும் ரெசிடென்ஸி விசா
- குறைந்தபட்சம் 6 IELTS மதிப்பெண்கள்
- செல்லுபடியாகும் BLS completion card
- விண்ணப்பக் கட்டணம் – 200 திர்ஹம்ஸ் வரை செலவாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel