இந்தியாவிற்கு பணம் அனுப்ப இது ஒரு நல்ல நேரம்!! UAE திர்ஹம்ஸிற்கு எதிராக இந்திய ரூபாய் வீழ்ச்சி!!

UAE திர்ஹம் (AED) க்கு எதிராக இந்திய ரூபாயின் (INR) மதிப்பு புதிய இறக்கத்தை அடைந்து ஒரு திர்ஹமின் மதிப்பு 23.94 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, இந்த மாற்று விகிதம் 23.80 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகள் மீதான புதிய வரி கட்டணங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களின் பேச்சுவார்த்தை குறித்த கவலைகளுக்கு பின்னர் இந்த ரூபாயின் வீழ்ச்சி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி சந்தைகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியதன் காரணத்தினால் ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க, இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தலையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 11:30 மணியளவில், ரூபாயின் மதிப்பு மீண்டும் 23.84 ஆக மாறியது. பொதுவாக, இந்திய ரூபாய் அழுத்தத்தில் இருக்கும்போது, அதன் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி வழக்கமாக டாலர்களை விற்கும்.
இது போன்ற சூழ்நிலையில் ரூபாயின் மதிப்பு ஒரு பக்கம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடாவில் வசிக்கும் இந்திய வெளிநாட்டினருக்கு, ரூபாயின் இந்த சரிவு ஒரு நல்ல விஷயம். அவர்கள் மிகவும் சாதகமான மாற்று விகிதத்தில் பணத்தை திருப்பி அனுப்ப முடியும் என்று கூறப்படுகின்றது.
மேலும் பிப்ரவரி 2025 இன் முதல் 10 நாட்களை ஒப்பிடுகையில், இந்திய ரூபாய் சுமார் 1.5% வீழ்ச்சியையடைந்துள்ளது. ஜனவரி 31 அன்று, ரூபாய் 23.58 ஆக இருந்தது, ஆனால் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அது 23.94 திர்ஹம்ஸ்க்கு சரிந்துள்ளது. எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவிற்கு பணத்தை திருப்பி அனுப்ப இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். ரூபாய் மதிப்பு சரிந்தாலும், பணப்பரிவர்த்தனைக்கு மாற்று விகிதம் சாதகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel